நேரிசை வெண்பா-குறையிலா வாழ்வு
புலனத்தின் குழு ஒன்றில், மேலே கொடுக்கப்பட்டிருக்கும் படத்துக்கு, ஒரு தமிழ் மூதறிஞர், வெண்பா வித்தகர், வார்த்தைச் சித்தர் ஒருவர், அப்படத்திற்கு ஒரு நேரிசை வெண்பா எழுதுக என விண்ணப்பித்திருந்தார். அனேக கவிஞர்கள் அதில் கலந்து கொண்டனர். கொடுத்த படத்துக்கு ஏற்ப எழுதிய வெண்பா.
=================
குறையிலா வாழ்வு
=================
நாத்துப் பறிப்பாள் நடவு நடுவாளாம்.!
பாத்திக்குள் நீரையதில் பாய்ச்சுவாள்.! - ஏத்தம்
இறைத்துக் கதிர்நெல் இடிக்கும் மகிழ்ச்சிக்
குறைவிலா இன்பக் குடி.!
==================
குறிப்பு "மூன்றாம் அடியில் இடிக்கும் என்பதும் அடிக்கும் என்பதும் ஒரே பொருள் தரும், மோனைக்காக இடிக்கும் என்பதை எடுத்துக் கொள்ளவும்.