எட்டு வழி வாசப்படி

என்னண்ணே நீங்க வீடு கட்டறீங்களாமே? வாஸ்தெல்லாம் பாத்தீங்களா?
@@@@@
பாத்தன்டா பரட்டைத் தலையா.
@@@@@@
எட்டு வழி வாசப்படி வச்சு வீடு கட்டறீங்களாமே? உங்களுக்கு எப்பிடி இந்த மாதிரி திட்டம் மனசில உருவாச்சு?
@@@@
நீ ஆளும் வளரல. உன்னோட அறிவும் வளரலடா பரட்டை. ஒரு பெரிய திட்டம் பத்தி தொலைக் காட்சில காட்டறாங்க, சொல்லறாங்க. செய்தித் தாள்லயும் போடறாங்க. அது என்ன திட்டம்னு உனக்குத் தெரியாதா?
@@@@
பொழப்புக் கெட்டு அதையெல்லாம் பாக்கறதில்லண்ணே. அஞ்சாம் வகுப்புப் படிச்ச எனக்கு எழுத்துக் கூட்டித்தான் படிக்கத் தெரியும். அவ்வளவு கஸ்டப்பட்டு செய்திய படிச்சு என்ன வரப்போகுது? இலவசத்
தொலைக் காட்சிப் பொட்டியைக் கொடுத்த அடுத்த நாளே வித்துட்டேன். சரி அந்தத் திட்டத்தைப் பத்தி சொல்லுங்கண்ணே.
@@@@
சொல்லறேன். உன்ன மாதிரி அறிவாளிங்களுக்கு நாந்தானே கெடச்சேன். சாலை விபத்துக்களக் குறைக்கறதுக்கும் சீக்கிரமா பெருநகரங்களுக்குப் போய்ச் சேர்றதுக்கும் எட்டு வழிச் சாலை அமைக்கப்போறாங்களாம். ஒரே சமயத்திலே எதிரும் புதிருமா எட்டு வண்டிங்க போலாமாம்.
@@@@
ஆமாண்ணே எட்டு வழிச்சாலைன்னு யாரோ பேசிட்டிருந்தது எங் காதுல விழுந்தது.
@@@@
இப்பத்தாண்டா தெரிது நீ ஒரு வாழ மட்டைன்னு. சரி விசயத்துக்கு வர்றேன். நாங்க கூட்டு குடும்பமா வாழறோம். மொத்தம் எட்டுப் பேரு. எல்லாரும் ஒரே சமயத்தில வெளில போறதுன்னாவோ அல்லது உள்ள நொழையறதுன்னாவோ ரொம்ப எடஞ்சலா இருக்குது. ஒரே வாசப்படி. குழந்தைங்க ஓடி வர்றப்ப யாராவது வந்தா தடுக்கி விழுந்தர்றாங்க. வயசான என்னோட அம்மா அப்பா விழுந்தா என்ன ஆகறது? எழும்பு முறிவுதான். இதெல்லாம் ஏற்படக்கூடாதுன்னு எட்டு வாசப்படி வச்சு வீட்டக் கட்டறேன். வீட்டில இருக்கற ஒவ்வொருத்தரும் அவுங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாசப்படியத்தான் பயன்படுத்தணும்.
@@@@@
அண்ணே எட்டு வழி வாசப்படி ரொம்ப புதுமையா இருக்குது. இனிமே உங்களப் பாத்து உங்க மாதிரி வசதியானவங்க எல்லாம் பல வழி வாசப்படியோட வீடு கட்டுவாங்க அண்ணே.
@@@@
டேய் பொசுங்கா முடித் தலையா, நான் எப்பவுமே அடுத்தவங்களுக்கு. நல்ல முன்மாதிரியாத்தாண்டா இருப்பேன்.

எழுதியவர் : மலர் (8-Jul-18, 10:05 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 150

சிறந்த நகைச்சுவைகள்

மேலே