காதல்

மருண்ட மான் விழிதானோ
உந்தன் விழிகள் என்றெண்ணி
சற்று நெருங்கிவந்தேன் உன்னை
நீ அறியாமலே பார்த்தேன், வியந்தேன்
வியந்தேன் அந்த மருண்ட விழிகள்
துள்ளும் கயலாய் மாறி அங்கும் இங்கும்
பார்வைக்கு ஓர் அபிநயம் தந்திட

பழரசம் ததும்பும் உந்தன் இதழ்கள் ,
இன்னும் விரிந்திடாது புன்னகைக்க
அதில் கண்டேனே நவரசங்கள்

ஆடு மயிலாய் ஒய்யாரமாய்
'ஸல்' ஸல் எனும் சலங்கை ஓசையுடன்
ஓர் அப்சரசுபோல் நீ நடந்து வரும்போது
அதைப் பார்த்து
என் மனது கிறங்கி மயங்கிட

இன்னும் ஓர் அடி முன்னே வைத்து
நீ நடந்தாலும் தாங்காது இந்த
என் இதயம் உன்னை என்னுள்
வைத்து என் காதல் தேவதையாய்
உன்னைப் பூஜிக்க தவறிவிட்டால்

பெண்ணே, இன்னும் ஏன்
உனக்கிந்த தயக்கம் - என் காதல் தேவதையே,
இதோ என்னைப்பார் உந்தன் பூஜாரி,
என் காதல் அர்ச்சனையை ஏற்றுக்கொள்;
இன்னும் சந்தேகம் ஏனடி உனக்கு
என் kadhalil சந்தேகம்
இதோ இப்போதே கிழித்திடுவேன்
என் நெஞ்சத்தை அதில் நீ காண்பாய்
உன்னுருவை என்னவளாய் எந்தன்
காதல் தேவதையாய்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Jul-18, 10:12 am)
Tanglish : kaadhal
பார்வை : 82

மேலே