நீயும் நானும்

நீயும் நானும்
நம் காதலும்

கை கோர்த்து நடை பழகிய
கார்காலம் ஒன்றின்
மழை இரவில்

வெள்ளை முயல்கள்
துள்ளி மறையும்!

ரோஜா இதழ்கள்
காற்றில் மிதக்கும்!

பேரமைதி
பெருங்கனவாகும்!

விழிகள் மட்டும்
வண்ணம் கசிய
கவிதை படைக்கும்!

எழுதியவர் : மது (9-Jul-18, 11:56 am)
Tanglish : neeyum naanum
பார்வை : 790

மேலே