கைபேசி முக நூல் காதல்

முக நூல் தந்த அறிமுகம்
எனக்கவள் நான் அவளுக்கு -இது இந்த
அறிமுகத்தின் புது முகம்
எங்களுக்கிடையே நேசம் கூட,
நேசம் காதலாய் மலர.............
நாங்கள் மட்டும் இன்னும்
ஒருவரை ஒருவர் நேரில்
பார்த்ததே இல்லை ......
எல்லாம் நன்றாய் எண்ணப்படி
கூடிவருகையில்,திடீரென
அவள், அந்த அவள் முக நூலில்
காணாமல் போக ........ஒலி அலையில்
ஒலியுடனும் சேர்ந்து உறவாடிய
காதல் ஒலி -ஒலியோடு காணாமல்
போனது..............
நிஜத்தை தேடி அலைகிறேன் நான்
இன்னும் கிடைத்தபாடில்லை .
எது நிஜம் என்றும் தெரியாமல்.............

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Jul-18, 2:16 pm)
பார்வை : 306

மேலே