மழை

மேகத்திலிருந்து மண்ணிலிறங்கி
மண்ணை நனைத்து மண்ணிற்கு
சோறாகி அதில் விளையும் நெல்லிற்கும்
சோறாகி ,மண்ணில் வாழ் ஜீவனுக்கெல்லாம்
தாகம் தீர்க்கும் நீராகி ஆராய்ப் பெருகி
ஓடுகிறாய் நிலத்திற்குள்ளும் இறங்கி
நிலையாய் நிற்கிறாய் பாதாள ஆறாய்
நிலநீராய்,கடல் நீராய் பொங்குகின்றாய்
நீராவியும் சோராய்யும் இருந்து எம்மை
எம்மை வாழவைக்கும் சஞ்சீவி திராவகம் நீ
மழை நீர், மண்ணீர், நிலநீர் என்பர்
வானிலிருந்து மண்ணில் இறங்கும் நீ
என்றும் தேவன் தந்த ஜீவாதாரம்
நீ இல்லையேல் ஏது இங்கு வாழ்வு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (11-Jul-18, 10:41 am)
Tanglish : mazhai
பார்வை : 207

மேலே