காதலில் தோல்வி

வெல்லப்பாகின் வாசனைக்கு மயங்கி
உருகும் பாகில் மாட்டிய ஈயைப்போல்
அவன் வீசிய பார்வையில் மயங்கி
நானும் வெல்லப்பாகில் வீழ்ந்த ஈயானேனே
பாகு இறுக மாண்ட ஈபோல் அவன்
காம லீலைக்கு என் வாழ்வின் கனவுகள்
மாண்டுபோக வெறும் நடைப்பிணமாக
நான்............வெறும் வலிகளை சுமந்து
அலைகிறேன் ........போகும் பாதை தெரியாது

எழுதியவர் : வசவங௦தமிழ்பித்தன்-வாசுதே (11-Jul-18, 11:19 am)
Tanglish : kathalil tholvi
பார்வை : 525

மேலே