உலகக்கோப்பை கால்பந்துப் போட்டி------------சைஜுவின் வர்ணனை---- espn மலையாள சேனலில்

உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகளைப் பார்க்கிறீர்களா? . ஒருவேளை பார்ப்பீர்களென்றால், espn மலையாள சேனலில் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நான் இதைத் தற்செயலாகவே கண்டடைந்தேன். மலையாளம் தெரியாதது ஒன்றும் பிரச்சினை இல்லை. சற்று நேரம் கவனித்துக் கேட்டால் புரிந்து கொள்ள முடிகிறது.

சைஜு தாமோதரன் என்ற வர்ணனையாளர் இதை ஒரு மறக்க முடியாத அனுபவமாக்குகிறார். மற்ற மொழி வர்ணனையாளர்கள் அழுது வடியும்போது இவரது வர்ணனை விறுவிறுப்பாகவும் உணர்ச்சிகரமாகவும் உள்ளது; நகைச்சுவையாகவும். கால் இறுதிப்போட்டியில் கோல் அடித்த ஒரு பிரான்ஸ் வீரர் களத்திற்கு வெளியே வரும்போது பயிற்சியாளர் அவரது கன்னத்தைக் கிள்ளிப் பாராட்டுகிறார். வர்ணனையாளர் “என்ட சக்கர முத்தே…..”!

இப்போது வீட்டில் குழந்தைகள் உட்பட அனைவரும் உலகக்கோப்பை விளையாட்டை சைஜுவின் வர்ணனையில்தான் கேட்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். யூ ட்யூபில் தேடினால் அவர் வர்ணனை உலகப்புகழ் பெற்றுவிட்டதாகத் தெரிகிறது.

S பாலகிருஷ்ணன், சென்னை

எழுதியவர் : (11-Jul-18, 6:22 pm)
பார்வை : 38

சிறந்த கட்டுரைகள்

மேலே