மிளைப்பெருங்கந்தனின் பாடல்

காமம் காமம் என்ப

காமம் அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்

முதைச்சுவர் கலித்த முற்றா இளம்புல்

மூதாதைவந்தாங்கு

விருந்தே காமம் பெருந்தோளாயே

என்ற மிளைப்பெருங்கந்தனின் பாடலின் அடர்த்தியைக் கவனியுங்கள். இதில் உள்ளது ஒரேயொரு படிமம் மட்டுமே. ‘மேட்டுநிலத்து இளம்புல்லை மூத்தபசு சப்பிப்பார்ப்பதைப்போல’ காமம் என்பது ஒரு முடிவிலா விருந்து. இப்படிமத்தை விளக்க, வாழ்க்கைத்தருணத்தில் பொருத்திக்காட்ட கவிஞன் முயலவில்லை. வாசகனின் கற்பனையை நம்பி அப்படியே விட்டுவிட்டுச் சென்றிருக்கிறான்.

எழுதியவர் : (11-Jul-18, 7:31 pm)
பார்வை : 63

மேலே