புத்தகக் காதலி

தொட்டதும்
உதிராத
முத்தெழுத்துக்
கோர்வை..!

ஒருகோடி
எழுத்துக்களின்
ஊமை
நாட்டிய
அரங்கேற்றம்..!

என் படுக்கையறையில்
அரவணைப்போடு
காத்திருக்கும்
தலையணைத்
தலைப்புகள்..!

தொட்டுத் திருப்பி
உற்று நோக்கினும்
கூச்சப்படாத
காகிதப் பாவை..!

மலர்மாலை காணா
என் கழுத்துக்கு
சால்வைகளையும்
போர்வைகளையும்
போர்த்திப் பார்க்கும்
என் மணவாட்டி..!
புத்தகம்..!

எழுதியவர் : பராசக்தி (11-Jul-18, 7:33 pm)
பார்வை : 60
மேலே