திருநீறும் - பர்தாவும்

பள்ளி பருவமது
புரியாத பருவம்
விளையாட்டு வயசு
நட்பு அரியாது
காதல் அரியாது
ஆயினும் இரண்டும்
கொண்டேன் அவளிடத்தில்

கொஞ்சி கொஞ்சி பேசுவாள்
குமரி மாதிரி அழுவாள்
கொழுக்கட்ட கண்ணம்
சிரிக்கும் போது அதில்
விழும் குழி என்னமோ பன்னும்

மதிமுகம் கொண்ட
அவளின் வெகுளிப் பேச்சும்
குறும்பு பார்வையும்
மனதில் பதிய ஓர் மாற்றம்
இருவரிடத்திலும்

எதிலும் தோற்காத நான்
அவளிடத்தில் தோற்றேன்
அவள் மனம் குளிர
தோற்றதில் ஓர் சந்தோசம்
வீட்டில் வாங்கிய திட்டு
என்றும் மறவாது மனது

அவளை சுற்றி சுற்றி
எனைச்சுற்றி நடப்பதை மறவ
கூடவே வதந்தியும் பரவியது
அவள் அழுத அந்த தருணம்
இனம்புரியா ஓர் வலி
அகவையை புரட்டிப்போடவே
ஏங்கித் தவித்தன இருவுள்ளமும்

கட்டுப்பாடான சமூகம்
விதிமுறைகள் பல
காலம் கடந்தது
பள்ளியும் மாறியது

இனி காண்பதரிது
என்ற நிலையில்
மனதை திடப்படுத்த

ஓர் நாள் கடைவீதியல்
ஐந்து அடி உயரத்தில்
கருப்பு நிற பர்தாவில்
ஓர் பெண் எனைப்பார்த்து
எப்படி இருக்க எனக்கேட்க

பார்வையிலே நான்
கட்டுப்பாடு இழக்க
அந்த விழி உணர்த்தியது
அவள் நிலையையும்
தவிப்பையும் - காதல்
சிலரை அழவைத்து
வேடிக்கை பார்க்கும் இங்கே

சிறையிலிட்ட மனம்
என்ன செய்யும்
சொல்லிவிட மனம் துடித்தாலும்
சமூகம் தடுத்தது
இது தான் விதியும் கூட...

திருநீருக்கும் பர்தாவிற்கும்
இடையில் இருவர் மனதில்
மலர்ந்த காதல் இறுதியில்
மலராமலே வாடியது....

எழுதியவர் : சே.இனியன் (11-Jul-18, 8:06 pm)
சேர்த்தது : இனியன்
பார்வை : 52

மேலே