காத்துக்கிடக்கிறேன்

ஆசை கொண்ட நெஞ்சத்தில் அரும்பாய் மலர்ந்தவள் நீ!

கோலிகுண்டு கண்களை உருட்டி என் இதயகூட்டில் காதல்குண்டை வெடிக்க செய்தவள் நீ!

வாசமற்று போன என் வாழ்வினிலே சுவாசமாய் வந்து என் ஜீவனை மனம் வீச வைத்தவள் நீ!

சிரிப்பை சிதறவிட்டு எனக்குள் சிம்பொனியை ஒலிக்க செய்தவள் நீ!

உதட்டின் ரேகைகளால் எனது உயிரை உறிஞ்சி குடித்தவள் நீ!

உன்னை பார்க்கும் நொடிக்காக ஒவ்வொரு நாளும் காத்துக்கிடக்கிறேன்!

பேருந்துநிறுத்தத்தில்!!!

எழுதியவர் : சுதாவி (11-Jul-18, 9:10 pm)
சேர்த்தது : சுதாவி
Tanglish : kaathukkidakkiren
பார்வை : 49
மேலே