601 ஈன்ற மகவோம்பார்க் கிருதிணையும் இன்றாம் - மக்களை வளர்த்தலும் படிப்பித்தலும் 1

கலி விருத்தம்

படுதொழில் விலங்குந்தன் பறழ்வ ளர்ந்துடல்
நெடுமையாங் காறுநன் கோம்பி நிற்குமால்
தொடுமுயர் திணைமரீஇச் சுதர்கண் அன்பிலாக்
கொடுமையோர்க்(கு) ஒருதிணை கூற வின்றரோ. 1

- மக்களை வளர்த்தலும் படிப்பித்தலும்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

கொடுந்தொழில் செய்யும் அரிமா முதலிய விலங்குகளும் தங்குட்டிகள் வளர்ந்து தம்மைத்தாமே காப்பாற்றிக் கொள்ளும் நிலைமை வரும்வரையில் அவற்றைப் பேணுகின்றன.

ஆறறிவாகிய கொள்ளுவன தள்ளுவனவாம் வழியறியும் கருத்துடைய உயர்திணை மக்களாய்ப் பிறந்தும் தாம் பெற்ற பிள்ளைகளிடத்து அன்பின்றிக் கொடுமை செய்வரேல், அவர் உயர்திணையா அல்லது அஃறிணையா என்று கூறுங்கள் என்கிறார் இப்பாடலாசிரியர்;

அவர் உயர்திணை அஃறிணை இரண்டுமிலராய்க் காணப்படுவர். அவர் இல்திணையராம் ஒழுக்கமற்றவராவர்.

படுதொழில்-கொடுஞ்செயல். சுதர்கள்-மக்கள். ஓம்பல்-பேணல். திணை-ஒழுக்கம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Jul-18, 9:27 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 56
மேலே