மழையே உலகிற்கு உன்னத நண்பன்

நண்பன் நண்பன் நட்பு
இருவரிடையே வளர்ந்த
உறவு ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
உலகிற்கே ஓர் உத்தம
நண்பனாய் ஏதும் எதிர்பாரா
நட்பும் தரும் அட்சயம் அல்லவோ
நீ மழையே ............
நண்பன் தன்னை தூற்றினாலும்
அவனை நல்வழி படுத்தும் நண்பன்போல்
நீ சற்றே வாராது பொய்யின் உன்னைத்
தூற்றியும், சற்றே அதிகமாய் பெய்திட
சாபமே தந்திடும் மாந்தரை நீயோ
என்றும் சாடுவதில்லை,பெரும் நண்பனாய்
தியாகியாக உன் கடமையை இறைவன்
வகுத்த பாதையில் அன்றுமுதல்
இன்றுவரை செய்துகொண்டு வருகிறாய்
மழையே, நீதான் உலகிற்கே உன்னத நண்பன்
உன் நட்பே மழைநீர்...........

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-Jul-18, 10:31 am)
பார்வை : 94
மேலே