துணிவில்லா வீரநெஞ்சம்...

காலங்கள் பல கடந்து
காத்திருந்தேன் - நீ என்னை,
காதல் செய்ய வருவாய் என ...
பயனில்லையாதலால்
முடிவெடுத்துவிட்டேன்
மூன்று நொடி முன்பு ...
கட்டுப்பாடின்றி திரியும்
கிறுக்கு மனம் என்னுடையது ....
பொறுமையின் உச்சத்தில்
புகைந்து கொண்டிருக்கும்
எரிமலையாக என்னுள் ,
வீரிட்டு வெடிக்க காத்திருக்கிறது ...
எனினும் உயிர்விட துணிவில்லா
வீர நெஞ்சமுண்டு என்னிடத்தில் ..
அந்த தைரியத்துடனே வருகிறேன் ....
என் காதலை உன்னிடம் சொல்ல ....
உன் பதில் என்னை
இறுமாப்புக் கொல்லசெய்தாலும் - என்
இருதயத்தில் ஆப்பு அடித்தாலும்
இன்பமே எனக்கு .....

~☆~

எழுதியவர் : முத்தரசு மகாலிங்கம் (12-Jul-18, 10:56 am)
சேர்த்தது : முத்தரசு
பார்வை : 14
மேலே