எங்கே தான் நீ சென்றாயோ

என் இதயத்தைக் கவர்ந்தெடுத்து
இடம் நகர்த்திக் சென்றவளே
இமை திறந்து தூக்கத்தை எடுத்துக்
கலைத்துச் சென்றவளே
எங்கே தான் நீ சென்றாய் ?
கடந்து செல்லும் மேகங்களே
பறந்து திரியும் புறாக்களே
அவளை நீ கண்டீரோ
அவள் இருக்குமிடம் அறிவீரோ
மலரும் பூக்களில் எல்லாம் அவள் முகம்
படரும் கொடிகளிலே தவழும் அவள் தேகம்
தென்றல் வருகையில் தருகிறாய் நீ முல்லை வாசம்
குயில் கூவினால் அங்கே உன் குரல் தான் பேசும்
கிணற்றில் தொலைத்த பொருளாக உன்னை
நான் நங்கூரமாய்த் தேடுகின்றேன்
நீ இப்போதே வந்து விடு
தொலைந்த என் தூக்கம் தந்து விடு
உன்னால் மூர்ச்சையான இதயம்
இனியாவது மூச்சு விட வேண்டாமா

அஷ்றப் அலி

எழுதியவர் : alaali (12-Jul-18, 12:43 pm)
பார்வை : 79
மேலே