தோகை இளமயில்

மெட்டு தோகை இளமயில் :

பல்லவி :

மோக மழையினில் தாகம் பெருகிடும் காலம் வரும் பொழுதோ?...
தேக நரம்பினில் காதல் துளிர்விடும் மாயம் மலர்கிறதோ?...
பால் மஞ்சள் நீரும்
தோல் பூசும் ஊரும்
பச்சோலை கீற்றுக்குள் நீராட்டுதே...

மோக மழையினில்...

சரணம் 1 :

துள்ளி ஓடும் பாதங்கள் அன்னம்போல் மாறும்
குயில் இசையோ?... செவ்விதழ் பிறக்கும்

உள்ளம் தோன்றும் மாற்றங்கள் இன்பத்தீ மூட்டும்
மலர் எழிலோ?... மதிமுகம் விரிக்கும்

மழை முகிலில் பூவின் மணம் பறந்து வரும் வண்டின் மனம்

புன்னகை நிறைந்திடும் இளம் பருவம்
புதுசுக அலையினில் நின்றாடும் பொன்தேகம்...

சரணம் 2 :

ஆசை என்னும் நீரோட்டம் நாள்தோறும் பாயும்
விழி பார்வைகள் வெண்பனி தெளிக்கும்

ஆனந்த ராகங்கள் உள்ளத்தை மீட்டும்
ஆடும் மயிலாய் இதயமும் குதிக்கும்

நதி வளைவோ?... தேகம் பெறும் ரதி அழகில் தாபம் தரும்

தேரென உலவிடும் புது உருவம்
இளமையின் கனவினில் பேரின்பம் தேன்தூவும்...

மோக மழையினில்...

எழுதியவர் : இதயம் விஜய் (12-Jul-18, 1:53 pm)
பார்வை : 42
மேலே