காதல் கவிதை

காயங்கள் யாவும் காயங்கள் ஆற்றும்
அருமருந்தாகிப்போனதே உன்முத்தமே

நாடோடி வாழ்க்கை முயன்று பார்த்தேன்
உன்னை தொடர்கையில்
தூவான தும்பியாகியது என் மனமே

முயன்று பார்த்தும் தூக்கம் இல்லையே
இமைகளில் நடனமாடும் உன்னை
இறங்க சொல்லவும் மனமில்லையே

வெயிலாடும் குன்றின் மேலே
சதிராடும் நெஞ்சம் கொண்டேன்
உன்னை இழுத்து அணைத்த நொடியில்

அதிகாரம் தேவையில்லை
என்னை நீ நாளும் வெல்ல
இருந்தாலும் அரிதாரம் பூசி நிற்குதே
நீ வரும் வழியில் என் மனமே

துளி தேனானாலும் பெரும் மழையாகவே
உன்னை கொண்டாடுமே என் கவிதை

தேன்கூடாக எதிரே நீ நடைபோடும்போது
தேன் பருக தடைபோடுவதும் முறையா அன்பே

துடிக்காத நெஞ்சம் இல்லை
தழுவாத கைகள் இல்லை
அணைமீறாத அன்பும் இல்லை
அகத்தி மரத்தை அசைத்துப் பார்க்கும்
தென்றல் காற்றைப்போலவே
உன் கற்றை கூந்தலில் ஊஞ்சலாடுதே
மனமே என் மனமே

எழுதியவர் : மேகலை (12-Jul-18, 2:00 pm)
சேர்த்தது : மேகலை
Tanglish : kaadhal kavithai
பார்வை : 206

பிரபலமான விளையாட்டுகள்

மேலே