வககன்னியப்பன் --மருத்துவர் ---தமிழ் ஆங்கில இலக்கிய அறிஞர் --எழுத்தாளர் _-படைப்பில் திருக்குற்றாலம் பதிகம் 1 - கலித்துறை

அரசாங்க ஒய்வு பெற்ற கண்மருத்துவ பேராசிரியர்.

மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் பிறந்த ஊர்.

'கீற்று' வலைத் தளத்தில் பிப்ரவரி, 2011 லிருந்து சுமார் 45 கட்டுரைகள், வெவ்வேறு பொருட்களில் - மருத்துவம், இலக்கியம், வரலாறு - கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

எழுத்து தளத்தில் படைத்துள்ள படைப்புகள்

கவிதைகள் 1244

கட்டுரைகள் 2012

கதை 1
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
படைப்பில் திருக்குற்றாலம் பதிகம் 1 - கலித்துறை

கடந்த 2012 ஆம் ஆண்டு நெல்லை மாவட்டத்திலுள்ள குற்றாலம் சென்று வந்தேன். இங்குள்ள முக்கிய அருவி (Main Falls) யில் குளித்துவிட்டு, அருவிக் கரையிலுள்ள குற்றாலநாதரையும், குழல்வாய்மொழி நாயகியையும் தரிசித்தேன்.

அருவி (நீர்வீழ்ச்சி) என்பது ஆறு போன்ற நீரோட்டம் ஆகும். நிலமட்ட வேறுபாட்டைக் கொண்ட அரிப்புக்கு உட்படாத பாறை அமைப்புக்களில் மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டத்துக்கு விழுவதால் உண்டாகும் நிலவியல் அமைப்பு ஆகும். குற்றாலத்திலுள்ள அருவிகள் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளன.

பல்வேறு மூலிகைகளில் கலந்து வரும் தண்ணீர் ஆதலால் இதில் நீராடுவது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. முக்கிய அருவி (Main Falls) யின் கரையில் குற்றால நாதர் (சிவன்) கோவில் உள்ளது.

குற்றாலநாதரைப் பற்றி, புகழ்ந்து திருஞான சம்பந்தர் குறிஞ்சிப் பண்ணில் 11 பதிகங்கள் பாடியுள்ளார். அவைகளின் பொருளுரையை, பதிகங்களுடன் தினம் ஒன்றாகக் இத்தளத்தில் உள்ள தமிழன்பர்களுக்கு மகிழ்வுடன் தருகிறேன்.

வம்பார் குன்றம் நீடுயர் சாரல் வளர்வேங்கைக்
கொம்பார் சோலைக் கோலவண் டுயாழ்செய் குற்றாலம்
அம்பா னெய்யோ டாடல மர்ந்தா னலர்கொன்றை
நம்பான் மேய நன்னகர் போலும் நமரங்காள். 1 - கலித்துறை

பதவுரை:

வம்பார்குன்றம் - பலமுறை கண்டார்க்கும் புதுமையையே பொருந்தும் மலை

நீடு உயர் சாரல் - காலத்தானும் இடத்தானும் நீடிக்கும் சாரல்,

வம்பு – புதுமை, கோல வண்டு - அழகிய வண்டு,

பால் நெய்யோடு - பால் நெய் இவற்றோடு.

அம் ஆடல் அமர்ந்தான் - நீராடலை விரும்பியவன்.

நமரங்காள் - நம்மவர்களே!

பொருளுரை:

நம்மவர்களே! காணுந்தோறும் புதுமையைப் பயக்கும் குன்றங்களையும், நீண்டுயர்ந்த மலைச்சாரலையும், வளர்ந்த வேங்கை மரங்களின் கிளைகள் அடர்ந்த சோலைகளில், அழகிய வண்டுகள் யாழ் போல் ஒலிப்பதுமாகிய குற்றாலம் இதுவாகும்.

இந்த ஊர், இனிய பால், நெய் ஆகியவற்றோடு நீராடலை விரும்புபவனும், விரிந்த கொன்றை மலர்களைச் சூடியவனுமாகிய நம் இறைவன் சிவபெருமான் எழுந்தருளிய நன்னகராகும்.

எழுதியவர் : (12-Jul-18, 8:52 pm)
பார்வை : 34
மேலே