காதலெனும் சோலை

காதலெனும் சோலையடி கண்ணம்மா
இங்கு பூத்துக் குலுங்கும் பூக்களெல்லாம்
சொல்லாமலே வாசம் பரப்பும், அதைத்
தாங்கி நம்மேல்வீசும் இளந்தென்றல்;
இங்குஉன்னை அந்த ஆலம் விழுதில்
ஊஞ்சல் கட்டி ஆட்டி விளையாட
என்மனம் துடிக்குதடி கண்ணம்மா,அதோ பார்
யாரும் சொல்லாமலேயே ராகங்கள் பாடிடும்
சோலைகருங்குயில் கூட்டம் உன்னை
ஊஞ்சலில் ஆட்டிட நெஞ்சம் துடிக்கையில்
அதை அறிந்துகொண்டது போல் ஓயாமல்
கூவதே என்னையும் உன்னையும் சேர்க்கவா...

அந்தி மாலையடி இது கண்ணம்மா,
வானத்தைபோர்த்திய மேகத் திரைக்குப்பின்னே
மங்கிய நிலவொளி வீசுதே , அதில் என் மேனி குளிர
மோகமும் தலைக்கேற உன்னைக்கட்டி அனைத்து
முத்தங்கள் ஆயிரம் தந்திட, வேண்டும் வேண்டுமென்று
என் மனம் சொல்வதை ,"உன்னில் நான் இருக்கின்றேன்
என்று அன்று கூறினாயே", இன்று இதை நீ உன்னில்
காணவில்லையா , கேட்கவில்லையா , பின்னே
ஏனடி கண்ணம்மா இன்னும் நீ இங்கு வரவில்லையே


அந்தியை முழு இரவு கவ்விடும் முன்னே
வந்துவிடு கண்ணம்மா நம் காதல் சோலைக்குள்
ஆலம் விழுது ஊஞ்சலில் ஆடிடலாம் பாடிடலாம்
குயில் இசையில் மதிமயங்கி பூவின் வாசத்தில்
தென்றலும் நமக்கு தாலாட்டுப் பாடிடவே .............

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Jul-18, 10:11 am)
Tanglish : kaathalenum solai
பார்வை : 141

மேலே