அனுபவமும் முதிர்ச்சியும்

குண்டு மழை பொழியுது
மேகம் கறுக்கவில்லை
சன்னங்கள் சிதறுது
சாரல் அடிக்கவில்லை
போர் விமானங்கள் இரையுது
இடி இடிக்கவில்லை
மக்கள் உயிர் பிழைக்க ஒதுங்குகிறார்கள்
மழைக்கு ஒதுங்கவில்லை
அங்கே எங்கே மக்கள் தெரியவில்லை
மயான அமைதி நிலவுகிறது
உணவு எங்கே உறைவிடம் எங்கே
இரவும் பகலும் இடையின்றி குண்டு சத்தம்
அன்று நடந்தது இன்று நடப்பது போல் ஆழமான அச்சம்
இன்னும் மக்கள் மனதை விட்டு அகலவில்லை
மாறாத காயங்கள் மனம் எல்லாம் ரணமாய்
எங்கிருந்தாலும் என்றும் அவர்கள் அந்த ஞாபகங்களில்
ஒவ்வொருவருக்கும் பாதி வயது கூடி விட்டது போல்
அனுபவமும் முதிர்ச்சியும்
அன்பாய் உருவான மக்கள் ஆடிப் போய் விட்டார்கள்

எழுதியவர் : பாத்திமாமலர் (13-Jul-18, 7:21 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 46

மேலே