அன்பே உயிர் மருந்து -

அன்பே அருமருந்து.
ஆயுர்தரும் மருந்து.
இல்லறத்து இன்மருந்து.
ஈடில்லா பெரும்மருந்து.
உலகியர் உணும் மருந்து.
ஊனினுள் உயிர்மருந்து.
எய்தல் தரும் மருந்து.
ஏழையின் பொன் மருந்து.
ஐந்திணையின் கரு மருந்து.
ஒருவரு ளொருவர் ஒரும்மருந்து.
ஓங்கும் தமிழருள்
ஓடும் செம்மருந்து.
ஔவை உரையி லூறும் தமிழ் மருந்து.
(ஃ ) போலின்றி உடலினுள் உயிரிடும் அன்பெனும் மாமருந்து........

-அன்புடன் கல்லறை....

எழுதியவர் : கல்லறை செல்வன் (14-Jul-18, 1:34 am)
சேர்த்தது : கல்லறை செல்வன்
பார்வை : 0
மேலே