காதலி குழந்தை

நான் தொலைந்த
இடத்தில் கிடைத்த
ஏதோ ஒரு
மினுமினுப்பு தான் நீ
உனக்கு பெயர் வைத்தேன்
என் காதலி என்று
உன்னை கொஞ்சி
களித்தேன்
என் செல்லம் என்று
நீ சிணுங்க நான்
சிலிர்த்தேன்
நீ சிரித்தால் நான்
சிதைந்தேன்
என்ன தவம் புரிந்தேனோ
என் காதலியே
எனக்கு குழந்தையாக கிடைக்க...!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (14-Jul-18, 7:44 am)
Tanglish : kathali kuzhanthai
பார்வை : 84
மேலே