இன்ப இரவு

அங்கே

தனியறையில் தனித்திருந்தோம்
தனியாக நின்றாளே
வாய்பேச வழியின்றி
விரல்பற்றி இழுத்தேனே

அருகிலே அமரவைத்தேன்
ஆசையாய்அவள் முகம்பார்த்தேன்
வெட்கத்தால் தலைகுனிந்தால்
வாரியே அனைத்தேனே

விடியும்வரை வண்ணக்கதை
விழியிரண்டில் வடித்துகாட்டி
இதழிரண்டில் இன்பதேனை
இனித்திடவே அள்ளித்தந்தால்

இன்றுவரை நானுலகில்
உண்ணாத உணவுயிது
முத்தத்தால் அள்ளிதந்தால்
மொத்தபசி போனதடி

அனைத்த கைவிடவில்லை
இரவெல்லாம் இன்பமயம்
இருள்நீக்க வந்தகதிரவன்தான்
இன்பத்தை நீக்கிவிட்டான்

நினைவெல்லாம் இரவைநோக்கி
நகர்ந்துபோ கதிரவனே
பால்நிலவே முகம்காட்டு
பாவையை அனைத்திருப்பேன்

எழுதியவர் : கவியரசன் (14-Jul-18, 3:22 pm)
சேர்த்தது : KAVIYARASU
பார்வை : 200

மேலே