ஆலகால விஷத்தை விழுங்கி விட்டேன் இப்போது தவிக்கிறேன் கண்ணீர் விட்ட குமாரசாமி

பெங்களூர்:

முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.

முதல்வர் பதவி என்பது ரோஜாப் பூ படுக்கை அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில் சட்டசபை தேர்தலில் தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து அரியணை ஏறியவர் குமாரசாமி.

தற்போது விவசாய கடன் தள்ளுபடி குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறார். பெங்களூரில் விவசாய கடன் தள்ளுபடி செய்வதற்காக பாராட்டு விழா நடந்தது. விழாவில் முதல்வர் குமாரசாமி கலந்து கொண்டு பேசுகையில், சிவனைப் போல நானும் ஆலகால விஷத்தை விழுங்கி விட்டேன்.

நான் மகிழ்ச்சி இல்லை

நான் முதல்வராக இருப்பதில் தொண்டர்களும் மக்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். ஆனால் நான் மகிழ்ச்சியாக இல்லை. முதல்வர் பதவி என்பது ரோஜாப்பூ படுக்கை அல்ல. முட்கள் நிறைந்த படுக்கையாகும்.

லட்சியங்கள்

கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் பணியாற்ற வேண்டும். பாஜகவின் தாக்குதல்களை எதிர்கொண்டு பதிலடி கொடுக்க வேண்டும். எனது கட்சியான மஜதவின் லட்சியங்களையும் நிறைவேற்ற வேண்டும். .

இப்படியே எனக்கு நெருக்கடிகள் கூடினால் எந்த நேரத்திலும் முதல்வர் பதவியை விலக நான் தயாராக உள்ளேன். ஆட்சி, அதிகாரத்துக்காக நானில்லை. விவசாயிகளையும் அவர்களது கடனையும் தள்ளுபடி செய்யவே முதல்வர் பதவியில் அமர்ந்துள்ளேன் என்று குமாரசாமி உருக்கமாக பேசினார்.

வாக்குறுதி

எனது கட்சி தனி பெரும்பான்மை பெரும் அளவுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை என்பதில் எனக்கு வருத்தம் உண்டு. விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வதில் எந்த மாநிலத்துக்கும் விருப்பம் இல்லை, அக்கறை இல்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் எத்தனை நெருக்கடி கொடுத்தாலும் நான் அளித்த வாக்குறுதியை காப்பாற்றி விட்டேன் என்றார் குமாரசாமி.

குமாரசாமி கண்ணீர்

தனது பேச்சின்போது குமாரசாமி கண் கலங்கியது. கண்ணீரைத் துடைத்து விட்டுக் கொண்டு அவர் பேசியதால் கூட்டத்தில் நெகிழ்ச்சி ஏற்பட்டது.


ONEINDIA

எழுதியவர் : (15-Jul-18, 4:59 pm)
பார்வை : 19

மேலே