உங்கள் வீட்டு கதவை கட்டுப்படுத்த துடிக்கும் அமேசான், கூகுள் என்ன காரணம்

நியூயார்க்:
ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் தொழில்நுட்பம் மூலம் வீட்டை பாதுகாக்கும் கருவிகளை உருவாக்குவதில் அமேசான், கூகுள் இடையே பெரிய போட்டி உருவாகி இருக்கிறது.

வீட்டை பாத்துகாக்க,அதுவாக பூட்ட, திறக்க உலகம் எங்கும் நிறைய கருவிகள் விற்கிறது. அதில் சில வகை நம்பகத்தன்மையற்றது. சிலது மிகவும் சிறப்பாக இயங்கும் திறனற்றது.

ஆனால் இந்த துறையில் கூகுள், அமேசான், ஆப்பிள் போன்ற ஜாம்பவான்கள் இறங்கினால் எப்படி இருக்கும். கூகுளும், அமேசானும் இதற்கான செயலில் இறங்கிவிட்டது.

வீடு

இந்த கருவி மூலம் உங்கள் வீட்டை பூட்டுவது, உங்களை வீட்டிற்கு யாரெல்லாம் வருகிறார்கள், அவர்களின் முகம , அவள் உங்களுக்கு யார், அவர்களிடம் நீங்கள் கொடுத்த அப்பாயின்மென்ட் இருக்கிறதா என்றெல்லாம் கண்டுபிடிக்க முடியும். எதிர்காலத்தில் வருபவர்களிடம் ஆயுதம் இருக்கிறதா என்று கண்டுபிடிக்க கூட வசதி ஏற்படுத்த முடியும். இதை கூகுளும் அமேசானும் உருவாக்க இருக்கிறது.

போட்டி இருக்கிறது

ஏற்கனவே இரண்டு நிறுவனங்களுக்கும் போட்டி, முதலில் இரண்டு நிறுவனமும் இந்த ஏஐ எனப்படும், ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் தொழில்நுட்பத்தில் போட்டியிட்டு வருகிறது. கூகுளில் செயற்கை நுண்ணறிவே திறன் பெருசா, அமேசான் உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு திறன் பெருசா என்று கேள்வியும், விவாதமும் நிலவு வருகிறது. இப்போது அது இந்த வீட்டை பாதுகாக்கும் போட்டியில் தொடர்கிறது.

அமேசான் முன்னிலையில் உள்ளது

ஆனால் இந்த வீட்டை பிடிக்கும் போட்டியில் அமேசான் கொஞ்சம் முன்னிலையில் இருக்கிறது என்று கூட கூறலாம். ஆம், அமேசான் ஏற்கனவே அலெக்சா என்ற சாதனத்தின் மூலம் பல் வீடுகளை எளிதாக கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் இந்த டோர் பெல், பாதுகாப்பு அம்சங்களை எளிதாக உருவாக்க முடிவெடுத்து இருக்கிறது.

இன்னும் கூட சிலர்

இதில் என்ன பிரச்சனை என்றால், நம்முடைய வீட்டை பாதுகாப்பதில் இவர்களுக்கு எவ்வளவு ஆசையோ அதே அளவு ஆசை, இன்னும் சில சிறிய புதிய நிறுவனங்களுக்கும் இருக்கிறது. அதன்படி ரிங், ஆர்ப்பார், நெஸ்ட் போன்ற சில சிறிய நிறுவங்களும் இப்படி டிஜிட்டல் பூட்டு ,வீட்டை கட்டுப்படுத்தும் சாதனம் என்று நிறைய வெளியிட்டு வருகிறது. இது சில விஷயங்களில் கூகுளை விட அதிக பயனளிக்கும் வகையில் உள்ளது.



ஷியாம்சுந்தர்

எழுதியவர் : (15-Jul-18, 6:57 pm)
பார்வை : 37

மேலே