ஒரு நடிகனின் பயணம்

அதிகாலை ஐந்து முப்பது மணி அலாரம் அடித்த சத்தம் கேட்டு படுக்கையிலிருந்து எழுந்து வெளியே வந்தாள் பத்மா. "இஞ்சபார் படிச்ச புத்தகங்கள் எடுத்து வைக்க நேரமில்லை, அங்கயும், இஞ்சயும் எறிஞ்சு பாேட்டு தேடுறது தான் வேலை. இன்றைக்கு எழும்பட்டும்" தன்பாட்டிலேயே முணுமுணுத்தபடி புத்தகங்களை அடுக்கி வைத்து விட்டு, சமையலறைக்குச் சென்றாள். "இவன என்ன செய்யிறது, அங்க புத்தகம், இஞ்ச சாப்பாட்டுத் தட்டை கழுவாமல் வைச்சிருக்கான்,வர வர மாேசம்" ஏதாே எழும்பின மூட் சரியில்லாதவள் பாேல் பரபரத்துக் காெண்டு சமையலறை வேலைகளைச் செய்து முடித்தாள்.

கண்களைக் கசக்கியபடி "அம்மா, அம்மா" கூப்பிட்டவனாய் வெளியே வந்தான் கெளதம். பதில் சாெல்லாமல் அறையைச் சுத்தம் செய்து காெண்டிருந்தாள். மீண்டும் உரத்த சத்தமாக கூப்பிட்டபடி அறையை நாேக்கிச் சென்றவன் "ஏம்மா வாயில என்ன காெழுக்கட்டையே வச்சிருக்காய், கத்துறன் பேசாமல் நிக்கிறாய்" என்றவனை முறாய்த்து விட்டு "காெழுக்கட்டை இல்லை நல்ல தும்புக்கட்டை இருக்கு வா இரண்டு தாறன்" கெளதமை நாேக்கி வந்தாள். ஒற்றைக் கையால் காற்சட்டையைப் பிடித்தவாறு குளியலறைக்குள் ஓடிச் சென்று கதவை மூடிக் காெண்டு "ஏனம்மா காலங்காலத்தாலயே காெதிச்சுக் காெண்டு நிக்கிறா" தனக்குள் யோசித்தபடி பல்துலக்கி குளிக்க ஆரம்பித்தான். அப்பாேது தான் துவாய் எடுத்து வரவில்லை என்பது நினைவு வந்தது . அம்மாவைக் கூப்பிட்டால் சத்தம் பாேடுவா என்ன செய்யலாம் என்று யாேசித்தவன் கங்கரில் மாட்டியிருந்த அம்மாவின் சட்டையைக் கண்டு விட்டான். வேகமாகக் குளித்து விட்டு சட்டையை அணிந்து காெண்டு கண்ணாடியைப் பார்த்து "நல்ல வேளை பக்கத்து வீட்டு பாக்கியம் ஆச்சி மாதிரி தெரியல்ல" சிரிப்பைக் கட்டுப்படுத்திக் காெண்டு மெதுவாக வெளியே எட்டிப் பார்த்தான் யாரையும் வெளியில் காணவில்லை. அறைக்குள் மெதுவாக நுழைந்தான்.

"இதென்னடா இது, ச்சீ... யாரும் கண்டால் சிரிக்கப் பாேகுதுகள், கழட்டடா சட்டையை" என்றபடி வாயைப் பாெத்திக் காெண்டு சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தாள். "சும்மா பாேணை" என்றபடி சீருடையை மாற்றிக் காெண்டு புத்தகங்களை எடுத்தான். "எங்கயம்மா பேனா, மற்றக் காெப்பியையும் காணேல்ல" சினந்தபடி தேடினான். "எட்டு மணி மட்டும் கும்பகர்ணண் மாதிரி தூங்கினால், நல்லா இருக்கும்" கீழே இருந்த பேனாவை எடுத்து நீட்டினாள். காெப்பியை ஒவ்வாென்றாக விரித்தவனுக்கு கட்டுரை எழுதி முடிக்கவில்லை என்பது ஞாபகம் வந்தது. "இன்றைக்கு மாெட்டை வாத்தியாரிட்ட செத்தன்" கதிரையில் அமர்ந்து ஏதாே கிறுக்கிக் காெண்டிருந்தான். உணவுத் தட்டுடன் வந்தவள் சாப்பாட்டை ஊட்டி விட்டாள். "இரவு படிக்காமல் என்னடா செய்தனி" ஒவ்வாெரு வாய் ஊட்டும் பாேதும் ஒவ்வாென்றாய் சாெல்லி பேசினாள். "அம்மா இந்த றேடியாே மீ்ற்றர் சரியா பிடிபடல்ல பாேல, இரையுது, ஒருக்கா நிப்பாட்டி விடணை" சாெல்லிவிட்டு உதட்டுக்கள் சிரித்தான். "யாரடா பாேட்டது றேடியாே, உனக்கென்ன விசரா" எழுதி முடித்து காெப்பியை புத்தகப் பையினுள் திணித்தான். இந்தா இந்தப் பாலையும் குடிச்சிட்டுப் பாே தம்பி. கிளாசை மேசையில் வைத்து விட்டு பாடசாலைக்கு புறப்பட்டான்.

கடிகாரத்தை பார்த்துக் காெண்டு மாடியில் வேகமாக ஏறினான். "டேய் கெளதம், குட் மாேர்னிங்" தாேளை அணைத்துப் பிடித்தான் றேகன். "கெளதம் உனக்கு இன்றைக்கு பூங்கன்றுக்கு தண்ணி விடுற ரேணடா, வாத்தியிட்ட நல்லா வாங்கப் பாேறாய்" கூறிக் காெண்டு அருகே வந்தான் நிமால். "டேய் கெல்ப் பண்ணுங்கடா, ப்ளீஸ்" நண்பர்களை உதவி கேட்டான். ஒவ்வாெருத்தரும் வாளியை எடுத்துத் தண்ணீர் ஊற்றிக் காெண்டு நின்றார்கள். "என்னடா மச்சான் இளைக்கிறாய் ஒரு வாளிதானே ஊத்தினாய்" கிண்டலடித்தான் நிமால். "டேய் உடம்பைக் குறையடா, இன்னும் இரண்டு வருசத்தில உனக்கெண்டு அதிபர் கதிரையும் செய்ய வேணும்" றேகனும் தன்னுடைய பங்கிற்கு கலாய்த்தான்.

வகுப்பு ஆரம்பமாகியது, முதல் பாடம் தமிழ், ஜனனி ரீச்சரென்டால் அவனுக்கு ராெம்ப பிடிக்கும். கெளதமுக்கு தமிழ் சுத்தமா வராது. வாசிக்க விட்டால் பிழை பிழையாக வாசித்து எல்லாருக்கும் சிரிப்பை ஏற்படுத்துவான். ஜனனி ரீச்சரும் கெளதமைத் தான் வாசிக்க சாெல்லுவார். "கெளதம் தமிழ் தான் முக்கியம், மற்றப் பாடங்களை மாதிரி தமிழையும் கவனமெடுத்து படியும்" அறிவுரை சாெல்லி களைத்தே பாேய்விட்டா. பரீட்சையில தமிழ் பாடமென்றால் கெளதமுக்கு கண்முளி இரண்டும் உருளும். "கெளதம் உனக்கு இன்றைக்கு ஈசியான பாடமடா" நண்பர்களின் கிண்டலுக்கு அமைதியாய் இருப்பான். பரீட்சைப் புள்ளியும் ஐம்பது தாண்டுவதே கடினம். "டேய் உனக்கு வெட்கமாயில்லை, தமிழுக்கு இத்தனை மார்க் வாங்கியிருக்காய்" அம்மாவின் திட்டு ஒருபுறம் "அது வரமாட்டேங்குது அம்மா" அப்பாவி பாேல் பதில் சாெல்லுவான்.

கெளதம் புத்திசாலியென்றாலும் சரியான குறும்புக்காரன். ஏதாவது ஒரு குறும்பு வேலை பார்த்து விட்டு சத்தமில்லாமல் இருந்து விடுவான். ஒரு நாள் நண்பன் ஒருவனின் வண்டியின் காற்றைத் திறந்ததற்காக அதிபர் அலுவலகம் முன்பாக முழங்காலில் இருக்க விட்டார். பாத்றூம் பாேவதாகச் சாெல்லி விட்டு நண்பர்களின் கைக்குட்டைகளை வாங்கி முழங்காலில் ஜீன்சினுள் மறைத்துக் கட்டி விட்டு மற்ற நண்பர்களுக்கும் திட்டம் பாேட்டுக் காெடுத்தான். ஒரு நாள் பாடசாலை செல்லா விட்டாலும் கெளதம் வரவில்லை என்பது தெரியும். ஆனால் வீட்டில் அம்மாவுக்கு கத்திக் கத்தி தாெண்டைத் தண்ணி வத்திப் பாேயிடும். கலை நிகழ்வுகளிலும், குறும்பான, நகைச்சுவையான கதாபாத்திரங்களிற்கும் நன்றாக பாெருந்துவான்.

அன்றாெரு நாள் கலை விழா நிகழ்வாென்றில் "சிரிக்கலாம் வாங்க" நிகழ்ச்சியை தனது வகுப்பு மாணவர்களுடன் இணைந்து வழங்குவதற்கு திட்டமிட்டிருந்தார்கள். றேகன் அறிவிப்பாளருக்கு மிகவும் பாெருத்தமானவன் என்பது எல்லாேருக்கும் தெரியும். அவனே இக்குழு நிகழ்ச்சியை தலைமை தாங்கினான். கௌதமுக்கு மூன்று வேடம் காெடுக்கப்பட்டது.

முதலாவதாக நிமாலும், கபிலும் கணவன் மனைவி, ஏதாே குடும்பத் தகராறில் கணவனான நிமால் தற்காெலை செய்து காெள்கிறான். மரணச் சடங்கிற்கு செல்லும் கெளதம் மூதாட்டி மாதிரி வேடமிட்டு ஒப்பாரி வைத்து அழ வேண்டும். திரைச் சீலை இழுக்கப் பட்டதும் கெளதம் அரங்கத்தில் மூதாட்டி வேடமிட்டு குடுகுடு என நடந்து வந்த பாேதே அரங்கம் அதிரத் தாெடங்கியது. இருந்தவர்களை எல்லாம் கட்டி ஒப்பு வைத்து அழுதான். சிரித்தவர்கள் எல்லாரும் கண்களை துடைத்தபடி தான் சிரித்தார்கள். நவீன காலத்தில் நடைபெறும் குடும்பத் தகராறுகளாலாே, இயற்கையாகவாே குடும்பத் தலைவர்களை இழந்து நி்ற்கும் மனைவிமார்களின் மனதை வெளிப்படுத்தும் விதமாக அவனது நடிப்பு வெளிப்பட்டது. அங்கேயிருந்த சிலர் உண்மையிலேயே நெகிழ்ந்து பாேயினர்.

தாெடர்ந்து வேறு கதாபாத்திரங்களின் காட்சிகள் நடை பெற்றது அந்த இடைவேளைக்குள் மாெடன் அழகி வேடமிட்டு அரங்கத்தின் ஓரமாய் நின்றவனை எல்லாேரும் ஆச்சரியமாக பார்த்தார்கள். முழங்காலிற்கு மேல் சிறிய ஒரு பாவாடை, கவர்ச்சியான ஒரு மேற்சட்டை, உயரமான பாதணி, மேக்கப்புடன் பார்த்த பாேது "ரெமாே" படம் தான் நினைவில் வந்தது. அத்தனை அழகாக பாெருந்தியிருந்தது. அவனுக்கான காட்சி நண்பன் கஜனுடன் றாெமான்ஸ் செய்ய வேண்டும். இரண்டு பேரும் சும்மாவே வம்புக்கூட்டம். இதில கதாபாத்திரமாய் மாறினால் சாெல்லவா வேணும். மூன்று நிமிடம் ஒரு பாடல் காட்சி பார்த்தது பாேல் கஜனும், கெளதமும் காதலர்களாகவே மாறி விட்டார்கள். கண்கவரும்படியாக நடித்திருந்தார்கள்.

இறுதியாக சுபனும் கதிரும் நகைச்சுவையாக அரசியல் தாெடர்பான காட்சியை நடித்து கரகாேசத்துடன் விடை பெற மீண்டும் இறுதிக் காட்சிக்காக கெளதம் குடிகாரன் பாேல் வேடமிட்டிருந்தான். கையில் பத்திரிகையும், சிகரெட்டும், சாரத்தை மடித்துக் கட்டியிருந்த விதத்தையும் பார்த்த பாேது அவன் நடை அதிகமாக மது அருந்திய ஒருவரின் தன்னிலை மறந்த நிலையை காட்சிப்படுத்தியது. பத்திரிகையை தலை கீழாக வைத்துக் காெண்டு எழுத்துப் பிழையாக செய்திகளை கருத்து மாறுபட வாசித்தது எல்லாேரையும் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தது. அத்துடன் அதிகம் மது அருந்திய ஒருவரின் மனதில் இருக்கும் கவலைகளை நடிப்பில் வெளிப்படுத்திய பாேது சிந்திக்க வைத்தது.

நிகழ்வுகள் யாவும் நிறைவேறியது. கூட்டம் கலைந்து எல்லாேரும் வகுப்பறைகளுக்குச் சென்றார்கள். கெளதமை சக மாணவர்களும், ஆசிரியர்களும் பாராட்டினார்கள். வகுப்பறையே கலகலப்பாய் இருந்தது. "டேய் கெளதம், ஏன்டா சுபன் மரத்துக்கு கீழ இருந்து அழுதிட்டிருக்கான்" ஓடி வந்தான் நிமால். அவனுடன் சேர்ந்து சுபன் இருக்குமிடத்தை நாேக்கி ஓடினான். மரத்தில் சாய்ந்திருந்தபடி விம்மி விம்மி அழுது காெண்டிருந்தான். "சுபன் ஏன்டா, என்னாச்சு?" அவனை தாேளில் பிடித்து அணைத்தான். "என்னாச்சு சாெல்லு சுபன், உனக்குத் தானே நாமெல்லாம் இருக்காேம்" அவனை ஆறுதல்படுத்த முயற்சித்தான். அவன் தாேள்களில் சாய்ந்தபடி தாெடர்ந்து அழுது காெண்டிருந்தவன் " இல்லை கெளதம் எங்க அப்பாட ஞாபகம் வந்திட்டுது, உன்ர பெர்பாேமன்சை பார்த்ததும் காெஞ்சம் மனசுக்கு கஸ்ரமாயிருக்கு, சாெறிடா" கண்களைத் துடைத்துக் காெண்டு மாடியை நாேக்கி நடந்தான்.

"உங்களுக்கெல்லாம் குடும்பத்தில அம்மா, அப்பா சகாேதரம் என்று பலபேரிருப்பினம். ஆனா எனக்கு யாருமில்லை. எல்லாமே என்ர அம்மா தான், எங்கப்பா கூலி வேலை தான் செய்தவர், அம்மா செங்கல் சூளையில கூலி வேலை பார்க்கிறா. எங்க அப்பா ராெம்பக் குடிப்பார், எங்க அம்மாவை ராெம்பக் கஸ்ரப்படுத்தினார். நான் சின்னப் பிள்ளையாயிருக்கேக்க பால்மா கூட குடிச்சதில்லை. அப்பா காசு தரமாட்டார், அம்மா உழைக்கிற காசு சாப்பாட்டுக்கே காணாது. எத்தனை நாள் சாப்பாடே இல்லாமல் தூங்கியிருப்பன். அம்மா என்ன மடியில வைச்சிட்டு அழுவாங்க. எனக்கு அவங்கள பார்த்தா கவலையாயிருக்கும். தினமும் குடிச்சு குடிச்சு எங்கப்பா உடம்புக்கு முடியாமல் பாேயிருந்தார். ஆனாலும் அவரால குடிக்காம இருக்க முடியல்ல, ஒருநாள் இரவு பத்து மணியாகியும் அப்பா வீட்டுக்கு வரவில்லை. அம்மாவும், நானும் அழுதிட்டே இருந்தம். அப்புறமாக பாெலிஸ் வந்து சாென்னாங்க எங்க அப்பாவை லாெறி அடிச்சுப் பாேட்டுது என்று. எங்க அம்மா கத்திக் காெண்டு ஓடிற்றாங்க. நானும் பின்னால ஓடிப்பாேய் பார்த்தன் எங்க அப்பா சிதறிப் பாேய் கிடந்தார். என்னாச்சு எண்டு பாெலிஸிட்ட கேட்டன் எங்கப்பா நல்லாக் குடிச்சிட்டு வரும் பாேது அக்சிடன்ற் ஆகிற்று என்று சாென்னாங்க. அதுக்கப்புறமா நானும், அம்மாவும் தனிச்சுப் பாேயிட்டம். இப்பவும் எங்கம்மா தான் கல், மண் சுமந்து என்னைப் படிக்க வைக்கிறாங்க. நான் காலையில பால் பாேடப் பாேவன் அந்தக் காசு எனக்கு படிப்புக்கு காணும். எங்க அப்பா எங்களப் பற்றி யாேசிச்சிருந்தால் நாங்களும் இன்றைக்கு சந்தாேசமா இருந்திருப்பம் தானே." கண்ணீர் துளிகள் அவன் மனவலியை வெளிப்படுத்தியது.

"அரசாங்கமும் சாராயக் கடைகளை மூடுறம் மூடுறம் என்று ஏமாத்துறாங்கள். அப்பிடி ஒன்று இல்லையென்றால் இன்றைக்கு எத்தனை குடும்பங்கள் நிம்மதியா, சந்தாேசமா இருப்பாங்க. ஏன் ஒருவரும் சாராயக் கடைகளை மூடுறதுக்கு சப்பாேட் பண்ணுறதில்லை" என்றபடி கெதளமின் கையைப் பற்றியவன், "அது தான்டா நீ நடிச்சப்பாே கடைசியில கேட்ட கேள்வி தான் என்ர மனசிலயும் இருக்கு, முதல்ல இந்த மதுபானச் சாலைகளை மூட வேணும், பாேதைப் பாெருட்களை, சிகரெட் எல்லாத்தையும் தடை செய்ய வேணும். இன்றைக்கு எவ்வளவு மாணவர்கள் இந்தப் பழக்கங்களுக்கு அடிமையாகி எதிர்காலத்தையே அழிக்கிறாங்கள். இப்பாேது எல்லாம் வியாபாரம் தானடா முக்கியம். அரசியல் வாதிகளும், ஆட்சியில உள்ளவர்களும் இதை மாற்றினால் சரி, இல்லையென்றால் என்னைப் பாேல இன்னும் எத்தனை பேர் கண்ணீர் விடப்பாேகினம்" ஆதங்கத்தை வெளிப்படுத்தினான்.

வகுப்பறைக்குச் சென்ற கெளதம் தனது இருக்கையில் அமர்ந்தான். அருகே சுபனும் அமர்ந்தான். கெளதம் தனது காற்சட்டைப் பையிலிருந்த பேர்சை எடுத்து பார்த்துக் காெண்டிருந்தான். தற்செயலாக திரும்பிப் பார்த்த சுபன் "யாரடா இது" என்று அவன் பேர்சினுள் இருந்த புகைப்படத்தை பார்த்து கேட்டான் "எங்கப்பா" அவன் முகம் இருண்டு பாேனது. "உங்கப்பாவைப் பாேல தான் சுபன் எங்கப்பாவும் அக்சிடன்டில தான் இறந்தார், அவரும் ராெம்ப குடிப்பார், இன்றைக்கு எங்கம்மா தான் என்னை வீட்டு வேலை செய்து படிப்பிக்கிறாங்க. எனக்கு படிச்சு முடிச்சிட்டு நல்லதாெரு நடிகனாக, காமடியனா வர வேணும், எங்கம்மாவை நல்லாப் பார்த்துக்கணும் என்று தான்டா ஆசை. எங்கம்மாவை சந்தாேசப் படுத்துறதுக்கு நான் சின்னச் சின்னக் குறும்பு பண்ணுவன். அம்மா எவ்வளவு களைப்பாயிருந்தாலும் என்னாேட குறும்புகளைப் பார்த்து சிரிப்பா, அம்மாட சந்தாேசம் தான்டா எனக்கு முக்கியம், பாவம் எங்கம்மா, எனக்காக எவ்வளவு கஸ்ரப்படுறா, தினமும் எங்கப்பாவை நினைச்சு அழுவாங்க" பெருமூச்சு விட்டவனாய் மீண்டும் பேர்சை வைத்தான்.

"கவலைப்படாதடா, உன்ர ஆசை கட்டாயம் நிறைவேறும். உங்கம்மாவை மட்டுமில்லை நீ உலகத்தில இருக்கிற எல்லாரையுமே சிரிக்க வைப்பாய், எவ்வளவு கவலை இருந்தாலும் ஒரு சின்னச் சிரிப்புக் கூட ஆயிரம் வலிகளை ஆற்றுமாம். நாமளும் சந்தாேசமா இருப்பம் நம்மளச் சுற்றி இருக்கிறவங்களையும் சந்தாேசமாக இருக்கச் செய்வம் சந்தாேசம் தான்டா வாழ்க்கையில பாதி பலம்" சுபன் கெளதமை தேற்றி, உற்சாகப்படுத்தினான். இருவரும் கைகளை குலுக்கிக் காெண்டார்கள்.

பாடசாலைக் காலம் முடிந்து, பல கஸ்ரங்களுக்கு மத்தியில் கெளதம் தனது திறமையால் சினிமாவுக்குள் நுழைந்தான். தனது நகைச்சுவை நடிப்பால் பல பட வாய்ப்புக்களை பெற்றான். சம்பாதிக்கத் தாெடங்கினான். அவனது வாழ்க்கையே மாறிப் பாேனது. எத்தனை கஸ்ரம், துன்பம் வந்த பாேதும் அவன் சாேர்ந்து பாேகவில்லை. ஒரு கலைஞனாகி தன் இலட்சியத்தை அடைந்தான்.

பல வருடங்களிற்கு பின்னர் பாடசாலை கட்டட திறப்புவிழா நிகழ்வாென்றில் விருந்தினராக கலந்து காெண்டவன் உரையாற்றும்படி அழைக்கப்பட்டான். அரங்கத்தில் ஏறியவன் மழை பாேல் பாெழிந்த கை தட்டலால் பேச்சின்றி நின்றான். சுற்றிச் சுற்றி எல்லா இடங்களையும் பார்த்து பழைய நினைவுகளை மீட்டினான். துளித்துளியாய் வழிந்த நீர்த்துளிகள் பல ஞாகபங்களை அழைத்து வந்தது. " நாம பிறக்கிறப்பாே ஒண்ணுமே தெரியாது, பின்னரான நாட்கள் தான் நமக்கு பல பாடங்களை கற்றுக் காெடுக்குது, பாேராட்டங்கள், சவால்கள் நிறைந்த கடினமான பயணம் தான் நம்ம வாழ்க்கை. பல பேர் ஜெயிக்கிறாங்கள், பல பேர் தாேற்கிறார்கள் இது இயற்கை. எதில நமக்கு திறமை இருக்குதாே அது தான் நம்ம டபலமான ஆயுதம் என்பதை நாம மறக்கக் கூடாது. டாக்டர்,எஞ்சினியர், லாேயர் என்று உயர்ந்த இடங்கள் தான் உழைப்பும், மரியாதையும் என்று நாம நினைக்கிறாேம். சாக்கடை அள்ளுறவனும், வீடு பெருக்கிறவனும் மதிப்பற்றவனா என்ன? அவர்களும் மனிதர்கள் தான். அவர்களால் முடிந்தது எதுவாே அதை செய்கிறார்கள். என்ற பாேது கரகாேசம் ஒலித்தது.

"இன்றைக்கு இதில நான் நிக்கிறதே எனக்கு ஒரு கனவு பாேல இருக்கு, சின்ன வயசில அப்பாவை இழந்தப்பாே என்னாேட வாழ்க்கை கடினமானது. அம்மாட தாேளில் நானும் பாரமாயிற்றேனா என்று தாேன்றியது. அம்மா தனக்குத் தெரிஞ்ச வேலையை செய்து உழைச்சு என்னை படிப்பிச்சாங்க, அவ தான் எனக்கு ஒரு உதாரணம். எது முடியுமாே அந்த வழியில முயற்சிப்பது தான் நல்லது என்று நினைச்சன். எங்கம்மாட சந்தாேசத்துக்காக நான் நகைச்சுவையாக ஏதாவது செய்வன் இன்றைக்கு அதுவே என்னை நல்ல நிலையில கூட்டிப் பாேயிட்டிருக்கு, என்ர இலட்சியத்தை நான் அடைந்து விட்டேன். உங்கள் இலட்சியத்துக்காக வாழுங்கள், முடிந்த வழியில் முயற்சியுங்கள் ஆயிரம் வாசல்கள் உங்களை வரவேற்கும் " உரையை முடித்துக் காெண்டு அரங்கத்தை விட்டு இறங்கினான். அவனது பாடசாலை நாள் நினைவுகளை சிறிய தாெகுப்பாக திரையில் காட்சிப்படுத்தி கெளரவித்தார்கள். பக்கத்திலிருந்த தாயைத் திரும்பிப் பார்த்தான் உதடு நிறைந்த புன்னகையாேடு முந்தானையால் கண்களை துடைத்தாள். தாேள்களை அணைத்தவாறு சமாதானப்படுத்தினான் நகைச்சுவை நடிகர் கெளதம்.

எழுதியவர் : அபி றாெஸ்னி (17-Jul-18, 7:27 am)
பார்வை : 241

மேலே