நான்-நீநீநீ...!!!!

உன்னை சுற்றி மட்டுமே
வட்மடிக்கும்
வண்ணத்துப்பூச்சி நான்
எந்தன் எண்ணத்துப்பூச்சி நீ

உன்னை கொத்தித்
தின்ன முயலும் கிளி நான்
என் அப்படியே கவ்வி
தின்ற புலி நீ

உன்னை நினைத்தே
வாழ்பவன் நான்
என் நினைவிலே
வாழ்பவள் நீ

உன் பிம்பம்
விழுங்கும் கண்ணாடி நான்
என்னையே விழுங்கிய
கண்ணழகி நீ

உன்னில் தொடக்கம் நான்
என்னில் முடிவிலி நீ

அன்று
நான் நான்..!
நீ நீ....!!

இன்று
நீ நான்..!
நான் நீ...!!

உன் காதல் நான்...!!
என் காதல் நீ..!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (17-Jul-18, 7:40 am)
பார்வை : 81

மேலே