தங்கச்சி

தங்கையென்னும் உரிமை உறவு...

எத்தனையோ சண்டைகள வலிய வந்து போட்டுடுவா

விட்டுக்கொடுக்க மறுத்து விதண்டாவாதம் செய்திடுவா

காரணமறியா கோள்மூட்டல்கள் தொடர்கதையா இருந்துச்சு

போட்டி பிடிவாதங்கள் கணக்கில்லாம அரங்கேருச்சு

கல்யாணம் அவளுக்குனு சொன்னப்ப பெருசா ஒன்னும் தெரியல

அவ கல்யாண நாள் நெருங்க நெருங்க கேலி பண்ணி பொழுதுபோச்சு

கல்யாணம் முடிஞ்சு அவ போன பின்னே எதோ ஒன்னு தொலைச்சு எடுக்குது

இதுவரை பாக்காத கட்சியா அப்பா அழறாரு

காரணம் யோசிச்சு பார்க்கையிலே கண்ணுல எப்படி நீர் வடியுது

பிரிவின் வலிய உணர்வது மிக மிக கடினம்

அவள மீண்டும் பார்க்கையில அனுபவிச்ச சந்தோசம் ஆழ்மனசுல பொங்கி வழிஞ்சுடுச்சு

அன்பு பாசம் தேடி அலைபவர்கள் ஒரு சகோதரியை பெற்றிருங்கள் அல்லது பெண்களில் சகோதரியை கண்டுகொள்ளுங்கள்...

எழுதியவர் : ஜான் (17-Jul-18, 9:14 am)
Tanglish : thaNgkassi
பார்வை : 103

மேலே