எங்கே செல்கிறது மானுடம்

எங்கே செல்கிறது மானுடம்...?

விண்ணில் பறந்த பொழுது தலை தூக்கிய உலகு
மண்ணில் அரசாலும் பொழுதும் தலை தூக்கிய உலகு
கண்ணில் வைத்து மாதரை காக்காததுதான் ஏனோ...?

தந்தை போல் இருப்பவன் தகாததாய் செய்தான்...
தமயன் என நினைத்தவன் தாராளமாய் தவறிழைத்தான்...
பூட்டன் என நினைத்தவன் பூட்டி வைத்து பொசுக்கினான்...
வாழ்க்கை ஆட்டம் ஆட வந்தவெனல்லாம் வழியேவந்து வாழ்வு கெடுத்தான்...

பிழைக்க வந்தவரெல்லாம் பிள்ளைக்கறி கேட்டால் பிழை தான் எப்புறம்....
யாதரியா அப்பிஞ்சின் வாழ்வுதான் அப்புறம்...
பச்சை கனியில் இச்சை காண்பதில் தான் உன் உச்ச சுகம் உள்ளதோ...
ஒரே தாயின் மக்களான உனக்கு இதுதான் நல்லதோ....

வயோதிகனுக்கு மகளில்லை...
இடையோனுக்கு தமக்கயில்லை...
இல்லவேயில்லை அவர்களாய் அவளை எண்ண நேரம் தான் அங்கு இல்லை...
மங்கையின் கதறல் இருளுகுள்ளே இயைபாய் அணைந்தது...
பொங்கிய பயம்தான் அவளுக்குள்ளே நெருப்பாய் எரிந்தது...

ஒரு நிமிடம்...ஒரு நொடி...ஒரு நாளிகயாவது எண்ணியிருந்தால் எண்ணி எண்ணி அவள் புழுங்க இடமில்லாமல் இருக்குமே...
காமக் கயவர்களுக்கு குழந்தை தெரியுமா...குமரி தெரியுமா...

வளராத சதைக்குள்ளா வல்புணர் பூண்டாய்...உலகத்தின் சாபத்தில் முழுதாக மாண்டாய்...
வகையான தெய்வங்கள் வழியொன்று செய்யட்டும்...
தனியான சக்தியினால் தலைதனை கொய்யட்டும்...😫😫

ஒவ்வொரு முறையும் கூறும் அதே கருத்தே ...
இங்கணமும் பதிவிட மனம் வேகிறதே...
இறுதியாய் உருகிய மெழுகு இதுவாய் முடியட்டும்...
கேவலங்கள் நடைபெறாத சமூகம் தலைமேல் எகிறட்டும்...

எங்கே செல்கிறது மானுடம்...?🔥🔥🔥

எழுதியவர் : ஹாருன் பாஷா (17-Jul-18, 11:28 pm)
சேர்த்தது : ஹாருன் பாஷா
பார்வை : 80

மேலே