வல்லவன் குட்டிக்கதை

ஐந்து அண்ணன்மாருக்கு
ஒரேயொரு தங்கை அறுவரும் வேட்டையாடி விளையாட
காட்டுக்குள்ளே பாரிய மரத்தின் மேல் பலமான கூடு வீடுபோல் அமைத்து
அங்கிருந்து வாழ்ந்து வந்தனர்

கரடி புலி சிங்கம் யானை இவைகளின் சத்தங்களுக்குள்ளும்
மிகப் பெரிய அச்சம் விலக்கி
சமைத்தும் உணவு உண்டு வந்தனர் .நினைத்தாலே நடுங்குகிறது
ஆனால் இளங் கன்று பயமறியாதது போல் தம்மை தாமே திடப் படுத்திக் கொண்டு வாழ்ந்து வந்தனர்
அண்ணன்களின் துணிச்சல் தங்கைக்கு பயமற்ற மனத்திடனைக் கொடுத்தது .
ஒருநாள் அண்ணன்கள் ஐவரும் வேட்டைக்கு சென்று விட்டனர் .
தனித்து விட்டாள் தங்கை.
புலி உறுமும் சத்தம் அவள் காதில் கேட்கிறது .
இத்தனை நாளும் இருந்தவளுக்கு இன்று தொட்டுவிட்டது பயம் .
மனித வாடை புலியின் மூக்கில் வீச
அதுவும் அம்மரத்தின் கீழ் உறுமிக் கொண்டு மரத்தைப் பார்த்தபடி
.
ஐயையோ / அவளால் சத்தம் போடவும் முடியவில்லை
.இச்சமயத்தில் அண்ணன் யாரும் வந்து விட்டால் அவர்கள் கதி என்னவாகும் .
பயத்தினால் அவளுக்கு வியர்த்துக் கொட்டியது .
அரைமணி நேரம் படுத்துக் கிடந்த புலி என்ன நினைத்ததோ,
திடீர்ன்னு எழுந்து பலத்த உறுமல் உறுமி விட்டு துள்ளியோடும் மானைத் துரத்த தொடங்கியது ,
அந்த மான் என்ன பாடோ என்று மனசுக்குள் பயந்து கொண்டு அண்ணன்மார் வரவை பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஒருவர் பின் ஒருவராக அண்ணன்களும் வந்தனர் .
தங்கை பயந்து அழுவதையும் அவள் பார்த்த புலியின் கதையையும் கேட்டவுடன் இனி நாம் தனியாக
நம் தங்கையை விட்டுப் போக கூடாது என்று முடிவெடுத்து எப்போதும் ஒரு அண்ணன் துணஇருப்பான்
.
இன்னுமொரு நாள் அதே புலி அதே மரத்தைப் பார்த்து விட்டது
அன்றும் மனித வாடை அதன் மூக்கில்....
அம்மரத்தைப் பார்த்தபடி மரத்தின் கீழ் உறுமிக் கொண்டு பதுங்கி கிடந்தது.
அதை பார்த்த அண்ணன் உன்னை என்ன செய்கிறேன் பார் என்று கோபத்துடன்
மறைந்திருந்து அம்பால் அதன் தலையில் குறிவைத்து எய்தான்
. உடனே புலி அவ்விடத்திலே துடிதுடித்து இறந்தது
அதை பார்த்துப் பயந்து நின்ற தங்கை நிம்மதி பெருமூச்சு விட்டாள் .
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு .

.

எழுதியவர் : பாத்திமாமலர் (18-Jul-18, 11:19 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 230

மேலே