வண்ணமகள்
உன்னை பார்த்துக்கொண்டே பக்கத்திலே படுத்திருந்தேன்
கைகள் என்மேல் பட்டவுடனே பரவசமாகிவிட்டேன்
காற்றில் கூந்தல்கள் என்மேல் மோத மோகம் கொண்டேன்
மல்லிகையாய் மயக்கவைக்கும் உன் கன்னங்களில் முத்தமிட நினைத்தேன்
உன் தூக்கம் கலைந்துவிடுமென எனது ஆசையை அடக்கிக்கொண்டேன்
வானவில்லொன்று தூங்கும் அழகினை கண்டு ரசித்துக்கொண்டேயிருந்தேன்
காலையில் சூரியஒளி என்மேல் பட்டவுடன் கண்விழித்து பார்த்தேன்
பக்கத்தில் வண்ணமகளை காணவில்லை
என்னவாயிற்றோ என தேடிப்பார்க்கையில் தான் தெரிந்தது
வண்ணமகள் வந்தது கனவில் என்று
இரவு எப்பொழுது வருமென ஏங்க ஆரம்பித்துவிட்டது என் மனது
வண்ணமகளை மீண்டும் ரசிப்பதற்காக!!!

