இவள் ஒரு ரோஜாப்பூ

சிரிக்கும் அழகினில்
இவள் ரோஜாப்பூ
சிந்தனை வனத்தினில்
இவள் மௌனப்பூ
பார்க்கும் பார்வையில்
இவள் தாமரைப்பூ
பழகும் முறையில்
இவள் காதல்பூ
புன்னகை இதழ்களில்
இவள் முல்லைப்பூ
பாலை மனத்திற்கு
இவள் சோலைப்பூ !

எழுதியவர் : கவின் சாரலன் (18-Jul-18, 6:19 pm)
பார்வை : 124

மேலே