சகிப்பின் கடவுள்

சகிப்பின் உச்சமும்
பொறுமையின் உச்சமும்
ஞானிகள் காட்டும்
தவவழியில் உள்ளதென
நினைத்திருந்தேன்
மலம் அள்ளுபவனை காணும் வரை
அவன் செய்யும் தவம் முனிகளும்
யோகிகளும் அறியா தவம்
தெய்வங்கள் உணரா தவம்
இயற்கையின் அழகை கண்டு
மெய்மறந்து ஆழ்ந்து செல்லும்
தவமல்ல இது
பசியையும் பட்டினியையும் உலகிற்கு
காட்டிய வறுமை என்னும் ஞானி
உலக தத்துவங்களை உடைத்து கற்று தந்த
தவம்
அஞ்ஞானியே ஆயினும் ஞானிகளின்
மலம் அள்ளும் சகிப்பின் தெய்வம் அவன்
ஆனால் அவனையே மலம் என்று நினைத்து
மூக்கை மூடும் சமூகம் சகிப்புத் தன்மையை
எங்கு தேடும்?

உணவு சாப்பிடும் முன் அவன் கரத்தால்
உண்ணுவது போல் நினைத்து பாருங்கள்
அவன் உங்களுக்கு கடவுளாகவே மாறிவிடுவான்

எழுதியவர் : மெ.மேக்சின் (18-Jul-18, 10:47 pm)
சேர்த்தது : Maxin
பார்வை : 176

மேலே