கனவில் நான் பறக்கின்றேன்
தினமெல்லாம் காற்றாடி பறக்கவிட்டு
இரவில் வந்தது கனவு அதில் நான்
உயரஉயர பறக்கின்றேன் காற்றாடி போல
அது என்னுள் உறங்கிய எண்ணப்பறவையோ
பறக்கின்ற காற்றாடிக்கு போகும் இடம்
ஏதுமிலை , என் எண்ணத்திற்கு குறிக்கோள்
உண்டல்லவா ........ அது போகுமிடம்
என் கனவின் ரகசியம் அறிந்திட
எனக்கே ஆசை