அன்பும் ஆடையும்

அழகாய் அடுக்கி வைத்த
அன்னையின் சேலை அலமாரிக்குள்
அதை உடுத்தும் சூழலில் உலகறியும்
எத்தனை ரகம் என்று
அதுபோல் தான் அப்பனவன் அன்பும் அரவணைப்பும்
அவன் மனதில் புதைந்திருக்கும்
சூழலுக்கேற்ப ஜொலித்திடும்
தும்பை நிற வேட்டி அணிந்து
தந்தை அவன் கௌரவமாய் வளம் வர
ஆங்காங்கே பட்டிருக்கும் கரையோடு
ஒத்திருக்கும் தாயவள் தூய்மை பாசத்தோடு
எப்போதாவது வந்து போகும் கோவம்
உடுத்திட விரும்பாத உடையன ஆடவர் மேலாடை
உடுத்தினால் அவருக்கு தனி மரியாதை அதுபோல்
தமக்கை அவள் பாசம் தனக்குளே வைத்திருப்பாள்
தரும் தருணம் இவன் உலகினையே மறந்திடுவான்
மங்கை அவள் மறைத்திடும் உள்ளாடை என
மறைத்தே வைத்திருப்பது தமயன் நேசம்
வெளித்தெரியும் வேலை உடனிருப்போர் சொல்லிவிட்டால்
உடனே இல்லை என தலையில் தட்டி உள்ளே மறைத்திடுவான்
- தினேஷ் ஏ

எழுதியவர் : தினேஷ் ஏ (20-Jul-18, 4:38 pm)
சேர்த்தது : தினேஷ் ஏ
பார்வை : 294

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே