கடுகளவு பார்வையிலே

எட்டாத நிலவாய்தான்
இதுவரை நீ இருந்தாய்
வெண்ணிலா உனை நான் - இன்று
எப்படித்தான் தொட்டேனோ?

உன் மூக்கு முழியழகு
எனை திருடனாய் ஆக்குதே
கண்டும் காணாமல்
கண் பார்த்துச் செல்லுதே
தினம் புன்னகை பூ பூத்து
நெஞ்சை கொள்ளை கொள்ளுதே
எந்நாளும் உன் மெளனம்
என்னுயிரைக் கொல்லுதே
ஆனாலும் என் மனம்
உனைக்காண ஏங்குதே!
என் உள்ளக்கொள்ளைக்காரியே
எதிர்காலத்தில் விட்டுவிடாதே
நடுவீதியிலே...!

கன்னி உன்னழகை
கண் குளிர பார்த்தேனே
எழில் முத்தமிழ் பேச்சை
இன்றுதான் கேட்டேனே

தள்ளி நில்லென்று சொன்னாலும்
இனி நிற்காது என்னுயிரு
இப்படியே நீ விலகி நின்றால்
என்னவாகும் என்னுயிர் மூச்சு?

நெருங்கிதான் வந்துவிட்டேன்
உன் மடி அருகே
என்னோட வாழ்க்கைக்கு
நீதான் அழகே!

மாயப்பொடிதனை
உன் விழி கலந்து
இளம் பார்வையிலே
அதைத் தூவிவிட்டு
விரைந்து நீ போவதெங்கே?
தனித்தென்னை தவிக்கவிட்டு!

கொல்லன் உலை போலே
கொதிக்குது என் மனசு
அதை தணிக்க
நீ வா எனை அணைக்க

சுண்டக்கஞ்சி எனக்கெதற்கு
உன் சுண்டுவிரலே போதும் எனக்கு
பலவகை சரக் கிருக்கு
இருந்தும்...
கடுகளவு உன் பார்வைக்கு
ஈடாகுமா அது?
உனைக் கண்டாலே
அனுஸ்தியாவை
உட்கொண்டது போல் இருக்கு
உன் மீது ஏன் இந்தக் கிறுக்கு?

எழுதியவர் : கிச்சாபாரதி (21-Jul-18, 11:23 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
பார்வை : 118

மேலே