Naanaaka

நானாக நானிருக்க
போராட்டம் ...
வஞ்சனை செய்வோர்
வார்த்தைகளில் விழுந்து
கோமாளியாய் போகிறேன்...
பாசத்திட்கு...
கட்டுப்பட்டவன்
என்பதால்...'

விமர்சனம் வரும்
போது எல்லாம்
கிள்ளி எரிந்து
போகிறேன்...
தலைக்கனம் என்று
தூற்றினாலும் நான்
நானாகவே இருக்கிறேன்
உண்மையை.மட்டுமே
நம்புவதால்..

பிறர் மீது
நான் கொண்ட
நம்பிக்கையே சிலசமயம்
முட்டாளாக்கி சிரிக்கிறது
துரோகத்தை மன்னிக்க
முடியவில்லையென்றாழும்
மறக்க நினைக்கின்றேன்..
என் உள்ளம் தூய்மையாய்
இருப்பதால்..

பள்ளத்தில் தள்ளுவோரையும்
மன்னிக்கிறேன்...
அவர்களும் ஏதோ
ஓர் நன்மையை எனக்கு
செய்திருப்பார்களென...
நான் எப்போதும்
நன்றி மறவாதவன்
என்பதால்..

என் அனுபவம்
எல்லோருக்கும்
பகிர்ந்து மகிழ்த்திடுவேன்
துன்பம் என்பது
வாழ்வில் நிரந்தரமில்லை
என்பதால்..
நானாக நானிருக்க..

எழுதியவர் : (23-Jul-18, 12:21 am)
சேர்த்தது : பச்சைப்பனிமலர்
பார்வை : 42

மேலே