அழகு ஓவியம் அசையும் காவியம்

தத்திக் குதிக்கும் பைங்கிளியாய்
தாவி நடந்து அவள் வந்தாள்
புத்தம் புதிய சிற்பம் போல்
புன்னகை தவழ அவள் நின்றாள்
கொத்து முல்லை உடல் மணக்க
கொஞ்சு மொழியில் கதை சொன்னாள்
முத்து ரதம் போல் உடல்மின்ன
மேனியெங்கும் வசீகரம் பிழிந்தாள்

அஷ்றப் அலி

எழுதியவர் : alaali (23-Jul-18, 12:26 pm)
பார்வை : 548

மேலே