நாலு கால் நண்பன்

அஃறிணையாய் அவதரித்தேன்
அறிமுகம் நடக்கையிலே
உயர்திணையாய் உணர்த்தப்பட்டேன்
என் குரல் கேட்டு
அஞ்சி நடுங்கி அரண்டவர் சிலர்
கொஞ்சி மகிழ்ந்து கட்டி புரண்டவர் பலர்
பிறப்பால் பல பெயர்கள் இருந்தாலும்
குறிப்பாய் எனக்கென்று சில பெயர்கள் பொதுவாய்
பினியால் நான் படுத்தால்
பணி மறந்து பணி செய்வாய்
உடல் சோகம் மீளும்வரை
உள்ளத்தில் சோகம் மீளாதிருப்பாய்
தொல்லைகள் நான் செய்திருப்பின்
பிள்ளையென பொறுத்திடுவாய்
பிறவி பெயர் கூறி
பிறர் என்னை பரிகாசித்தால்
வழங்கிய பெயர் கூறி
வழக்காடி வருத்திடுவாய் அவரை
சங்கிலியால் பிணைத்திருந்தாலும்
சங்கடங்கள் ஏதுமின்றி
கால்நடையாய் நின்றிருந்தேன்
கருத்தில் என்றும்
நண்பனாய் நடத்தும்
உன் மனதிற்க்கு நிகர்
என்றும் இவன் நன்றி சிறியதே
இப்படிக்கு நானாக நாய்!!!

எழுதியவர் : தினேஷ் ஏ (23-Jul-18, 12:53 pm)
சேர்த்தது : தினேஷ் ஏ
Tanglish : naalu kaal nanban
பார்வை : 203

மேலே