ஏழெழு ஜென்மத்துக்கும்

கல்லம் இல்லா
வெள்ளை சிரிப்பே!
என் கன்னத்தில் வந்து
ஒட்டிய அழகே!
உன் கழுத்தில்
என் முகம் பதித்து
குடியேற வேண்டும்
ஏழெழு ஜென்மத்துக்கும்
உன் கூடவே வாழ வேண்டும்
ஊர் உலகத்தில் யாரும்
இதுவரை கண்டீராத
காதலை நீ எனக்கு
மட்டுமே தந்திட வேண்டுமடி....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (23-Jul-18, 4:11 pm)
பார்வை : 50

மேலே