என் இறப்புக்கு காரணம் ஜேன்கொம் மற்றும் ப்ரைன் ஆக்ஷன்

உனக்கு பிடித்த நிலா.
பின் அந்த நிலவு தேயும்.
கரகரத்த இந்த முன்னிரவு.
மழை பிசைந்த சாலையில்
தடுக்கி விழுந்த
பிச்சைக்காரனின் உருளும்
மூன்று பாத்திரங்களின் ஓசை.
யாரையோ அழைத்து பின்
விக்கித்து அழும் நாயின்
மோப்பம் சுடும் பாசம்.
படுக்கையின் மூலையில்
அமர்ந்து பார்க்கிறேன்
விரலில் புகையும் சிகரெட்.
கண்ணாடி குவளை
வியர்க்க மிதக்கும்
அஞ்சலில் இன்று வந்த
வோட்கா மார்டினி
இன்னொரு திரவ குழப்பம்.
கருமையில் கசியும் இரவு.
இனி நான் நடிக்கிறேன்
என்றெழுந்த நான்
குழம்பி விழுந்த குவளைக்குள்
பனியின் எச்சிலாய் அக்காதல்.
அணைந்து எரியும் மொபைலில்
நீ அனுப்பிய விதவிதமான
குட் பை தகவல்கள்...
வரவிருக்கும் பகலில் இனி
எப்படி இருப்பேனோ?
இரவை கெஞ்சும் மனது
இப்படியே இருவென்று கேட்க
வாட்ஸப்பில் புதையும் கண்கள்.
அவள் ஸ்டேட்டஸ் மாற மாற
எரிய எரிய உட்புகும் வோட்கா.
பழைய ஐ லவ் யூ மெசேஜை
பார்த்து பார்த்து குமையும்
மனதை இனி வரும் பகலில்
கொத்திப்போக காத்திருக்கும்
காக்கைக் குடும்பம்.
வந்தது அப்பகல்.
நிலவில் நான்.

எழுதியவர் : ஸ்பரிசன் (26-Jul-18, 7:49 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 67

மேலே