மதி மயக்கும் மது ஒழிப்பீர்

மதி மயக்கும் மது ஒழிப்பீர்
***********************************************************

கள் அமுது எண்ணமுற கன்னமது
பின்னமுற பெண்ணமுதின் சோகமதுவே !
உள்ள மது குடலேற உள்ளமது
தடுமாற வெள்ளமது இல்லமதிலே!
இல்ல மதன் தெள்ளமுதாம் பிள்ளைக்கனியமுதை
கொல்லுமது பந்தமது அறுக்குமதுவே !
இல்லமது சிறப்புறவும் இருக்குமது
ஒழித்திடவும் வழிகாட்டு தமிழகமே !!

எழுதியவர் : சக்கரைவாசன் (26-Jul-18, 9:42 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 133

மேலே