போதைப்பொருளும்-இளைய தலைமுறையினரும்

============================================
இறைவன் நமக்குக் கொடுத்த மிகப்பெரும் அருட்கொடை நமது வாழ்வு
தீயவை சேந்தாலே வாசம் இருக்காது
வாசமின்றிய தீயவை காற்றேடு கரைந்தாலே
அழுக்கை முகத்தில் பூசி கொள்ளும்

வாழ்வில் ஏற்படும் சவால்களுக்கும் போட்டிகளுக்கும் முகம் கொடுக்க முடியாமல்
போகும் போது. மனதை ஆறுதல் படுத்த இலகுவாக போதை பொருட்களை உண்டு. சுய அறிவை இழந்து இதுவே இன்பமென எண்ணி அதற்கே அடிமையாக போவது. வேதனைக்குரிய விடயம்

இன்று பெரும் நோய் போல பரவி கொண்டிருக்கும் போதைப்பொருள் பாவனையை. இளையோர் விரும்பி ,அன்பை சுருக்கி அடிபணிந்து போவது. மானிட அழிவின் வளர்ச்சியின் தொடக்கமே..

.எல்லோருக்கும்
இன்றைய சூழ்நிலையில்
எதையும் அனுபவித்துப் பார்க்க வேண்டும். என்ற ஆவலும் ஆசையும் வரும் ..

போதை பாவனையின்
விளைவுகளின் விபரீதம் பற்றி அனைவருக்கும்
தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.
என உறுதி பூணுவோம்.
பிரச்சனை தோன்றும் போது .
எவ்வாறு சமாளிப்பது என்ற அறிவை ஊட்டுவோம். முயற்சி செய்தாலும்
முடியாமை என்பது இல்லை என நம்பிக்கை
ஊட்டுவோம்.

ஆனாலும்,
இன்றைய சினிமா பொறுப்பின்றி, இளையோரை நலிவுறச் செய்து. கொண்டு தவறாக வழிகாட்டி. தன் இலாபத்தை மட்டுமே
நோக்கமாகக் கொண்டு
செயற்படுகிறது..

இதனால் பாதிக்கப்படுவது யார்?
இவர்களை நம்பி உள்ள உறவுகள்தான்.

இளையோருக்கு வழிகாட்டும் வண்ணம்.
தூர நோக்கு சிந்தனை கொண்டு. சினிமா உலகம் செயற்பட வேண்டும் .
இதனால் ஆரோக்கியமானதொரு சமுகத்தை உண்டாக்கலாம்.

அன்பே உயிர்களுக்கு மூலதனம்.
அதுவே வன்முறையில் இருந்து ,உயிர்களை காக்கின்றது .. அதனாலேயே,
மானிடர்களுக்கு உறவுப்பாலமாக இருந்து கொண்டு இருக்கிறது .

போதை பொருளுக்கு
அடிமையாகி திசை மாறி போகும் .
இளையோரை நல்வழிப்படுத்திட வேண்டும் .

அவர்களுக்கும் வழிகாட்டி ஒளிமயமான
வாழ்வை கொடுக்க வேண்டும்.
இவர்களை போதை வழிக்கு
தூண்டிவிடும் இளையதலைமுறைகளிக்கிடையில் உள்ள முரண்பாட்டை அகற்றிவிட வேண்டும்.

தங்களது இளமைப் பருவத்தில்
இவர் அறிவு உள்ளவர் ,அவர் அறிவு இல்லாதவர் ,என சண்டை கொள்ளும் மனநிலையை தவிர்த்துடவேண்டும் .

ஒருமை நிலை உருவாக்கி பண்பாட்டை வளர்க்க வேண்டும் .
பார் எல்லாம் அன்பு தீ வைத்துவிட வேண்டும்.

மாறாக இதற்காக முயலாமை இன்றி இருப்போமாயின்.
பெரிய எதிர்விளைவை சமூகம் எதிர் நோக்க வேண்டி வரும்.

போதை பாவனைகளை நலிவடைய செய்ய.
ஊக்கம் கொடுக்கும் பானங்களை
விழிப்பூட்டும் நிகழ்விவுகளை உருவாக்க வேண்டும் .
வேரூன்றி இருக்கும் போதைப்பாவனை
வளர்வதற்கு தடை உண்டாக்கிவிடும்.

நிச்சயமாக எல்லோரும் இதற்காக முயன்றால், இளையோரிடம்
மிகத் தெளிவான எதிர்காலம் கண்முன்பே மலரும். எனவே
மரணம் தரும். போதையை ஒழிப்பதற்கு இன்றே சிந்தனை கொள்வோம்.

எழுதியவர் : அகிலன் ராஜா (26-Jul-18, 11:43 pm)
பார்வை : 292

மேலே