வெற்றி என்பது எதுவோ

வெற்றி என்பது எதுவோ

வெற்றி என்பது
சிறுபருவத்தில் ஓட்டப்பந்தயத்தில்
முதல் பரிசு கோப்பையைப்
பெற்று அப்பாவின் முத்தம் பெற்றபோது
அந்த முத்தம் வெற்றியானது

பள்ளி பருவத்தில்
முதல் மதிப்பெண் எடுத்து
மார்க் அட்டையை நீட்டியபோது
அம்மா தந்த முத்தமும்
வெற்றிக்காரன் நான் எனச்
சொல்லிச் சென்றது
நண்பர் எல்லாம் தட்டிய
கைத்தட்டலின் சத்தம்மேல்
வந்த போதை இன்னும்
இறங்கிய பாடில்லை

இந்த கைத்தட்டலுக்காக
ஏங்கி ஏங்கி காலங்கள்
தொலைகிறது பல கண்களுக்கு
வெற்றி என்பது ஒரு போதை
வெற்றிக்கான தேடல்
தொடர்ந்து கொண்டே
இருக்கிறது நம்மவர்களிடம்

வெற்றி என்பது ஒரு பாதை
இப்பொழுது வந்துவிடும்
இப்பொழுது வந்துவிடும்
என தொடர்ந்துகொண்டே
இருக்கிறது நம் நடை

வெற்றி என்பது எதுவோ
வெற்றி எல்லாம் எட்டா உயரமாய்
காண்பிக்கப் படுகிறது
வெற்றியோடு கோடி
கோடியாய் பணம்
ஒட்டியே கிடக்கிறது

வெற்றி பெற்றவரெல்லாம்
விரிவாக பேசுகிறார்கள்
இதை சாதித்தேன் என்றும்
இப்படி சாதித்தேன் என்றும்
யாருக்கு தெரியும்
அவர் எதையெல்லாம் தொலைத்தாரோ

வெற்றியை வெறுக்கவில்லை
வெற்றியின் உச்சம் காண
தன்னை மறந்து
தன சுற்றம் மறக்கும்
அந்த போதையை
அந்த பேராசையையே
வெறுக்கிறேன் நான்

எவெரென அறியாத இன்னொரு
இதயம் மலர புன்னைகைக்கும்
இனிமையான இதயம் கொள்வதே
வாழ்வின் வெற்றி


வெற்றி என்ற பெரும் இலக்கை நோக்கி
வெறிபிடித்தாற்போல ஓடாமல்
வாழ்வின் ஒவ்வொரு மையில் கல்லையும்
ரசித்து நடைபோடும் வாழ்கை
மனிதத்தின் அழகு என்பேன்
தடைகளை தாண்டி தாண்டி
ஓடும் ஒவ்வொரு முயற்சிகளும்
வெற்றி என்பேன்
வந்து சேரும் உச்சமட்டுமல்ல அல்ல
விழுந்தபின் எழும் எழுச்சி வெற்றி
தோல்விகளை கண்டு துவளாமல்
எதிர்கொள்ளும் புன்னகை தான் வெற்றி

எழுதியவர் : யாழினி வளன் (27-Jul-18, 4:12 am)
சேர்த்தது : யாழினி வளன்
பார்வை : 171

மேலே