காதல்

காதல் என்பது ஒன்றுமில்லை அது ஒரு வகையான அன்பு தான்.ஆண்,பெண் என இருபாலருக்கும் இடையிலான ஒரு அன்பு தான் காதல் . காதலின் புனிதல் காதலரின் கையில் தான் உள்ளது .எல்லாரும் சுலபமாக கூறலாம், காதலித்தால் சந்தோசமாக இருக்கலாம்னு, ஆனால் அவர்கள் படும் துயரத்தின் ஆளவோ பல ஆயிரம். அவர்களின் வலிகளை நினைத்து கூட பார்க்க முடியாது ! ஆயிரம் சண்டைகள், பல பல மோதல்கள், சில சில சந்தேங்கள் மூலம் அவர்கள் படும் கஷ்டங்களோ.... ஐய்யோ !

இதயத்தை மட்டுமே பரிமாறிக்கொள்வது காதல் அல்ல , உண்மையான அன்பினை பகிர்ந்து கொள்வதே காதல், சந்தேங்களை உடைத்தெறிவதே காதல்,கோபத்தை விலக்கி பொறுமை காப்பதே காதல், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி கொள்வதே காதல்.

காதல் எனும் செடியில். அன்பு எனும் விதை போட்டால் நம்பிக்கை எனும் மரம் தானாகவே வளரும்
நோய்க்கு உணவே மருந்து , காதலுக்கு அன்பே மருந்து . காதல் எனும் நம்பிக்கையில் பல இடையூறுகளை கடந்து வருகிறது அந்த இரு இதயங்கள் .

பிரிவுகள் கூட, காதலின் நினைவால் ஒன்றாகும்.காதலுக்கு நேரம்,காலம்,தூரம் என எதுவும் கிடையாது. மனம் சொல்லும் மௌன வார்த்தைகளே காதல்.

காதல் எனும் பயணத்தில் ,பல வழித்தடைகளை கடந்து சென்றால் தான் வெற்றி எனும் இலக்கை எட்ட முடியும். மொழிகள் மறந்தே உணர்வே காதல்.காதலுக்கு உரிய முக்கிய பண்பே காத்திருப்பு ..

வெறும் இது மாட்டும் காதல் இல்ல, தாய் மகனின் மேல் காட்டும் அன்பிற்கு பெயர் காதல், தந்தை மகளின் மேல் காட்டும் அன்பிற்கு பெயர் காதல். மனிதன் விலங்கின் மேல் காட்டும் அன்பிற்கு பெயரும் காதல் தான்..


எனது இக்கதையே காதலர்க்கு சமர்ப்பிக்கிறேன் ..

எழுதியவர் : manikandan karunanithi (28-Jul-18, 10:41 pm)
சேர்த்தது : mani
Tanglish : kaadhal
பார்வை : 518

மேலே