மாறடிக்க மறந்தோமோ

சாதிக்கொடுமையாலும்
சருமம் கருத்ததாலும்
சகலமும் மறுக்கலாமோ!
பாவப்பட்ட மாந்தரை
பொல்லாத வார்த்தையாலே
போக வழி காட்டலாமோ!

காதல் கல்யாணம்
சாதிப்பேயை விரட்டும்,
சில பொழுதுகளில்
காதல் என்ற அஸ்திரம்
கல்யாணத்தைத் தகர்த்து
பெண்மையை சீரழிக்கும்

சாதி வெறி
ஒட்டுமொத்த சமூகத்தின்
ஒற்றுமையைக் குலைத்துவிடும்
சாதிகளும் சாதுக்களும்
சாராத சமுதாயம் வேண்டும்
நாடு நலம் பெற

பகுத்தறிவை பாழ்படுத்தும்
மூடப்பழக்கங்கள் அத்தனையும்
வறியவை தான்
முடிவுகட்ட நினைத்திருந்தும்
மறக்கடிக்கும் நிகழ்வுகளால்
மாறடிக்க மறந்தோமோ!

எழுதியவர் : கோ. கணபதி. (2-Aug-18, 9:41 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 53

மேலே