நியூட்டனின் மூன்றாம் விதி
என்ன விந்தை இது
ஒரு குடும்பத்தில் ஒரே வாரிசு
அவிழ்ந்த நெல்லி மூட்டைப்போல்
பிள்ளைக்கூட்டம் வாழ்ந்த காலம்
மலையேறிப்போனது...!
ஓடி விளையாடு பாப்பா
என்றான் பாரதி
ஓடாமலே விளையாடுது இந்த பாப்பா கைப்பேசிக்குள்...!
பந்து விளையாடுது இந்த பாப்பா
நியூட்டனின் மூன்றாம் விதியின்
துணையோடு சுவற்றில் அடித்து
வேறு விளையாட்டு துணையில்லாததால்...!
சுவர்கள் கூட
விளையாட்டு வீரனானது
நின்ற இடத்தில் நின்றப்படியே...!
.

