"நடுத்தெருவில் நாங்கள்"

கடலைப்பொரி தின்றுவிட்டு
யாரோ
கசக்கி எரிந்துவிட்ட காகிதம்,

என்னை பலநாள்
பார்த்து பழகியதுபோல
என் காலடியில்
கிடந்து உரசியது.

கையில் எடுத்து
பிரித்துப் பார்த்தேன்.

என்றோ உனக்காக
நான் எழுதிய காதல் கவிதைகள்-
இன்றும் கண்ணீரை சுமந்தபடி....

எழுதியவர் : ஆண்டவர் (3-Aug-18, 4:58 pm)
சேர்த்தது : kavithai
பார்வை : 49

மேலே