இப்படியும் யோசிக்கும் சிறுவர் உள்ளம் கடலோர கவிதைகள்

பசிபிக் மாக்கடலின்
கடற்கரையில் ஒன்று அது
நானும் என் ஆறுவயது பேரன்
மணல் மேடையில்............
கடலைப்பார்த்து அலைகளின்
எழுச்சியில் என் எண்ணங்கள் .....
எழுந்துவந்த அலைகள் எங்கள்
கால்களில் தஞ்சம்.......
அடித்துவந்து மணலில் சேர்த்தது
முழுவதுமாய், உடைந்ததுமாய்
வித விதமாய் கிளிஞ்சல்கள்
இல்லை கடல் வாழ் நத்தைகளின் வீடுகள்
அப்பப்பா.. முத்துச்சிப்பிகளாய்,
அடுக்குமாடிகளாய்,மூடிய முரங்கள்போல்
இன்னும் சொல்லொணா வண்ணங்களில்......

இவற்றையெல்லாம் பார்த்துகொன்டே
இருந்த என் பேரன், ஒவ்வொன்றாய்
கைகளை எடுத்து பார்த்து வியந்தான்
இப்போது சிலவற்றை தன் பாண்ட்
பைகளில் திணித்துக்கொண்டான்...
சற்றும் எதிர்பார்க்காதபோது என்னை
கேட்டான்' தாத்தா, ஒண்ண புரியல,
இந்த கிளிஞ்சல்கள் ....நத்தைகளின்
கடல் நத்தைகளின் கிளிஞ்சல்..
இப்படி வித விதமாய் சமச்சீராய்
வீடுபோன்று இருப்பது.... சில பல
நிறங்களைக்கொண்டும் இருப்பது
விநோதமாய் இருக்கின்றனவே, தாத்தா..
வீட்டில் நான் பார்த்த நத்தை கூடுபோல்
இருந்தாலும் வித விதமாய் இருக்கின்றனவே
இவற்றை இந்த நத்தைகளுக்கு கட்டி தந்தவர்
யார் தாத்தா, கடவுளா ..............? என்றான்
நான் சொன்னேன்' நம்ம வீடை நாம் கட்டிக்கொள்வதுபோல்
இவை.....என்றேன்......அதற்கவன் .......இந்த வடிவமைப்பு?
அதை யார் சொல்லித்தந்தார்களோ.... கடவுளா?
என்றான்.....................
என்ன சொல்வதென்று தெரியாது வாய்யடைத்துப்போனேன்
ஆறுவயது சிறுவனுக்கும் இப்படி எண்ணம்
தோன்ற செய்யும் அந்த படைத்தவனை எண்ணி...

'உன் கேள்விக்கு , நாளைக்கு பதில்' என்று
கூறி அங்கிருந்து இருவரும் கிளம்பினோம்
வீடுநோக்கி......................

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Aug-18, 4:34 am)
பார்வை : 123

மேலே